Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' ஒவ்வொரு சீட்டுக்கும் இவ்வளவு போராட்டமா?'  -காங்கிரஸ் கட்சிக்கு, 'செக்' வைத்த ஸ்டாலின்

ள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது தி.மு.க. ' நாங்கள் விரும்பிய அளவுக்கு உள்ளாட்சியில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஒவ்வொரு இடங்களையும் போராடியே பெற வேண்டியிருக்கிறது' எனக் குமுறுகின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள். 

சட்டமன்றத் தேர்தலைப் போலவே, உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.கவுடனான கூட்டணியை உறுதி செய்துவிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர். இதையடுத்து, ' உள்ளாட்சியில் கூடுதல் இடங்களைக் கேட்டுப் பெறுங்கள்' என அறிவுறுத்தியிருக்கிறார் ராகுல்காந்தி. ஆனால், தி.மு.க பொருளாளர் ஸ்டாலினோ, ' பர்சன்டேஜ் கணக்கெல்லாம் இந்தத் தேர்தலில் வேண்டாம். எங்கள் மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி, வெற்றி பெறக் கூடிய வார்டுகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்' எனத் உறுதியாகக் கூறிவிட்டார். இதற்காக, மாநில அளவில் காங்கிரஸ் மேற்பார்வையாளர்களை நியமித்தார் திருநாவுக்கரசர். " அவர்களிடமும் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது" என்கிறார் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர். தொடர்ந்து நம்மிடம், 

" தி.மு.க மாவட்ட செயலாளர்களிடம் பேசுவதற்காக, மாநிலம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்புமனுத் தாக்கலுக்கு சில நாட்களே இருக்கும் சூழலில், சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு திருப்பூரிலும் நெல்லையிலும் பணியிடம் ஒதுக்குவது சரியானதுதானா? அதைப் பற்றிய முறையான தகவலைக்கூட தலைமை தெரிவிக்கவில்லை. ' உங்களை மேற்பார்வையாளராக நியமித்துள்ளோம்' என்ற தகவல்கூட சொல்லப்படவில்லை. பல மாவட்டங்களில் சீட் பங்கீட்டில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. தி.மு.க மாவட்ட செயலாளர்களிடம் பேசினால், ' நீங்கள் கேட்கும் வார்டில் தி.மு.க நின்றால் வெற்றி பெற்றுவிடும். உங்களுக்குக் கொடுத்தால் அ.தி.மு.க எளிதாக வெற்றி பெற்றுவிடும்' என்கின்றனர். அதற்கு அடுத்து, ' எவ்வளவு பணம் செலவு செய்வீர்கள்? குறைந்தபட்சம் 20 லட்ச ரூபாயாவது செலவழிப்பார்களா?' எனக் கேட்கின்றனர். இதனால், சீட்டுகளை உறுதியாகப் பெறுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

தி.மு.கவினரிடம் போராடி சீட் பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறோம். இப்போதுள்ள சூழலில் சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், அதிகளவில் காங்கிரஸ் வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. எங்களுக்கு செல்வாக்கான பல வார்டுகள் இந்த மாவட்டங்களில் வருகின்றன. ஆனால், தி.மு.க மாவட்ட செயலாளர்கள் தாராள மனநிலையில் இல்லை. ' பெரும்பாலான இடங்களில் தி.மு.கவே போட்டியிட வேண்டும்' என்றுதான் விரும்புகின்றனர். இந்தக் குழப்பங்களுக்கு மாநிலத் தலைமை எந்தத் தீர்வையும் சொல்லவில்லை. சட்டமன்றத் தேர்தலில் 20 சதவீத இடங்களை காங்கிரஸ் வென்றுள்ளது. அதற்கேற்ற வகையிலாவது சீட் பங்கீட்டை உறுதி செய்திருக்கலாம். வழக்கம்போல, முந்தைய தலைவர் இளங்கோவனுக்கு நெருக்கமானவர்களைப் பழிவாங்கும் செயலைத் தொடங்கிவிட்டா திருநாவுக்கரசர். 

சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமைக்கு எதிராக வேலை பார்த்ததாகக் கூறி செய்யாறு விஷ்ணுபிரசாத் மற்றும் ஆறு மாவட்டத் தலைவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ' இதற்கு அகில இந்திய தலைமை ஒப்புதல் தரவில்லை' என்றுகூறி, அந்த உத்தரவை ரத்து செய்துவிட்டார் திருநாவுக்கரசர். இளங்கோவனால் நியமிக்கப்பட்ட ஆறு மாவட்ட பொறுப்பாளர்களும் நீக்கப்பட்டுவிட்டனர். மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற இரண்டு வாரங்களுக்குள் கோஷ்டி மோதலுக்குப் பிள்ளையாளர் சுழி போட்டுவிட்டார் திருநாவுக்கரசர். முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்களின் ஆதரவில் செயல்படுகிறார் புதிய தலைவர். அதிலும், உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளால், தேர்தல் வெற்றியில்தான் பெரும் பாதிப்பு ஏற்படும்" என வேதனைப்பட்டார்.

-ஆ.விஜயானந்த் 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ