Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சி, சேலம், தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர்  பட்டியல் வெளியீடு!

திருச்சி, சேலம், தூத்துக்குடி ஆகிய மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை திமுக இன்று வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சித்தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதன் முதலில் 12 மாநகராட்சிகளில் போட்டியிடும் வார்டு உறுப்பினர்கள் பட்டியலை முதல் கட்டமாக அ.தி.மு.க. அறிவித்தது.

மக்கள் நலக்கூட்டணி போட்டியிடும் முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாநகராட்சியில் மதிமுக 6,13,19,27,38,39,41,52 ஆகிய வார்டுகளில் போட்டியிடுகிறது. 8,15,22,23,28,29,30,35 ஆகிய வார்டுகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 12,55,57,58,63 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 7,14,25,37,49,50,53,60,65 ஆகிய வார்டுகளில் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், திமுகவும் இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. திருச்சி, சேலம், தூத்துக்குடி ஆகிய மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. திருச்சி மாநகராட்சியில் கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 14,37,44 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 6, 25, 35, 39, 50, 58, 59 ஆகிய 7 வார்டுகளும்; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 20, 53 ஆகிய 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 8, 9, 16, 17, 36 ஆகிய 5 வார்டுகளும்; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 19வது வார்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தி.மு.க. வெளியிட்டுள்ள முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ளார். 

வேட்பாளர் பட்டியலுக்கு க்ளிக் செய்க....

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close