Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்னும் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும்!

 

மழை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நேற்று இரவு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும், அதிகமாக பெய்த பலத்த மழையால், சாலைகள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்தது. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.90 நிமிடங்கள் மழை நீடித்ததால், 65மி.மீ மழை பதிவானதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது.  இன்று காலையும் சாலைகளில் நீர் தேங்கி இருந்தது.

 

இன்றைய வானிலை


சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.இரவு மற்றும் அதிகாலையில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ