Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இப்படி இருந்தால்தான் சீட் கிடைக்குமா?'- அ.தி.மு.க மா.செ.வுடன் மல்லுக்கட்டிய மகளிரணி (அதிர்ச்சி ஆடியோ)

சென்னை தென்சென்னை தெற்கு மாவட்டத்தில் மகளிருக்கு ஒதுக்கப்பட்ட 128, 129 ஆகிய இரண்டு வார்டுகளில் களேபரம் நடந்து வருகிறது. சீட் கேட்டு கிடைக்காத மகளிரணியினர் நேற்று மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான வி.என்.ரவியை சந்தித்து காரசாரமாக விவாதம் செய்தனர். அப்போது அங்கு நடந்த உரையாடல் இது!

மகளிரணி: ஆண் வார்டு என்றால் வட்ட செயலாளருக்கு கொடுத்து இருந்தால் நாங்கள் தாராளமாக கையெழுத்து போட்டுவிட்டு வேலை  செய்ய சென்று இருப்போம். மகளிர் வார்டு என்று அறிவிக்கப்பட்ட பிறகு எங்களை ஏன் நீங்கள் ஒதுக்கினீர்கள். 

மாவட்டச் செயலாளர்: மூன்று பேருடைய பெயரை தலைமையில் கொடுத்தேன்.

மகளிரணி: தலைமையில் வட்டச் செயலாளர் மனைவியை எப்படி டிக் செய்தார்கள்?. 

மா.செ.: நீங்கள் போய் அம்மாவிடம் லட்டர் கொடுத்து வாங்கி கொள்ளுங்கள். நான் பரிந்துரை செய்து விட்டேன். 

மகளிரணி: ஒவ்வொரு எலக்சன் டைம்ல நீங்கள் கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் வந்து உங்களுக்காக வேலை செய்தோமே, வெயில், மழை எல்லாம் பார்க்காமல் நின்றோம். அந்தம்மாவுக்கு என்ன தெரியும். கல்பனா யாருன்னா.... நான் எத்தனை முறை ஜெயிலுக்குப் போயிருக்கேன் தெரியுமா.

மா.செ.: சரி

மகளிரணி: எல்லோர் எதிர்ப்பையும் மீறி அவர்களுக்கு சீட் கொடுத்து இருக்கிறீர்கள். நாங்கள் எல்லோரும் வேலை செய்தோம். உங்கள எம்.எல்.ஏவாக உட்கார வைக்க எப்படியெல்லாம் வேலை செய்தோம்.  உயிர் கொடுத்து வேலை செய்தோம்.

அண்ணா ஒரு நிமிஷம் என்கிறார் ஒரு மகளிரணி நிர்வாகி. பின்னர் உரையாடல் தொடங்கியது.

மகளிரணி: கல்பனா யாருன்னெ தெரியாது. எம்.எல்.ஏ தேர்தல் சமயத்துல 9 லேடீஸ் மட்டுமே நின்றோம். கோயில்ல வேண்டிகிட்டோம். வீடு, வீடா டோர் கேன்வாஸ் செய்தோம். ஆனால் அந்தம்மா ஓட்டு கேட்டு சென்ற போது கூட கதவை மூடி விட்டார்கள். 

மா.செ.: மேலிடம் முடிவு செய்து விட்டார்கள். 

மகளிரணி: கல்பனா பெயர் எப்படி வந்தது. 

மா.செ.: லிஸ்ட் எடுத்து கொடுத்துட்டேன். 

மகளிரணி: கல்பனா பெயரை எப்படி அனுப்பினீர்கள் 

மா.செ.: இந்த கேள்வியை நீங்கள் கேட்க கூடாது 

மகளிரணி: நாங்கள் கேட்போம், நீங்கள் பதில் சொல்லணும், உங்களுக்கு ஓட்டுக்கேட்ட அந்தம்மா வெளியே வந்தார்களா. 

இந்த உரையாடலுக்கு இடையே ஆத்திரமடைந்த ஒரு மகளிரணி நிர்வாகி, 'இந்த ஏரியாவில ஒரு ஓட்டு வாங்க முடியாது பாத்துடுடலாமா நான் சவால் விடுகிறேன்' என்று சொல்ல, மாவட்டச் செயலாளர் வார்த்தையும் உஷ்ணமானது.

மா.செ.: இப்படி பேசக்கூடாது 

மகளிரணி: என்ன பண்ணுவீர்கள் 

மா.செ.:  உங்ககிட்ட பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பொம்பள, பொண்ணுன்னு மரியாதையா பேசுறேன். நான் கொடுத்த லிஸ்ட்ல கூட மூணு பேருக்கு மாறி இருக்கு நான் என்ன பண்ணறது. 

மகளிரணி: 25 வருஷம் கட்சின்னு இருக்கிறேன். என் கணவர் இறக்கும்போது கூட கையில இரட்டை இலையைப் பிடித்துக் கொண்டே இறந்தாரு.

மா.செ.: லட்டர் கொடுத்துட்டு வந்து இருக்கேன். என்னால முடிந்தது செய்கிறேன். எல்லா மாவட்ட செயலாளர்களும் லட்டர் கொடுத்து இருக்கேன். லிஸ்ட் தான் கொடுக்க முடியும். மூணு பேரில உங்களில் யாருக்கும் கொடுத்தாலும் சரியா... எங்கள மீறி என்ன நடந்து இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? 

மகளிரணி: நீங்க தான் சொல்லணும்.

மா.செ.: நான் யார் கிட்ட சொல்ல முடியும் 

என்பதோடு 7 நிமிட அந்த ஆடியோ முடிவடைகிறது. 

 

 

 


எஸ்.மகேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close