Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

ள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நேரத்தில், ‘உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே..!’ என்று நேற்று விகடன் இணையதளத்தில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதில், மக்கள் பலர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளனர். ‘மழைக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்திலும் வடிகால் அமைப்புச் சீராக இல்லை’ என்பது பெரும்பாலான மக்களின் பதிலாக இருக்கிறது. பகல் நேரத்திலேயே சாலைக்கும், வடிகால் பொருத்தப்பட்டிருக்கும் இடத்துக்கும் வேறுபாடு உள்ளது. இரவு நேரங்களில் மக்களின் நிலைதான் என்ன? மின்சாரம் மற்றும் தெருவிளக்குகளின் வசதி நன்றாக உள்ளது என கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மக்கள் தெரித்துள்ளனர். ஒரு பக்கம், வடிகால் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பில் அரசு சரிவரச் செயல்படாவிட்டாலும், மின்சாரம் மற்றும் தெருவிளக்கு அமைப்பதில் நன்றாகச் செயல்பட்டிருக்கிறது. ‘அரசு, மக்களுக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளையும் வழங்க வேண்டும்’ என்பதே அனைவரின் கோரிக்கை. தங்களின் மாநகராட்சியில் அவர்களுக்கு அவசியம் தேவைப்படும், அன்றாடும் உபயோகிக்கும் விஷயங்கள் எந்த நிலையில் உள்ளன, அதைப் பற்றிய விழிப்பு உணர்வு எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதே இந்த சர்வேயின் நோக்கம். நடந்த சர்வேவுக்கான முடிவுகள் கீழே...

1. உங்கள் பகுதியில் சாலை வசதிகள் எப்படி உள்ளன?

2. வடிகால் அமைப்பு மற்றும் சுத்திகரிப்பு?

3. உங்கள் பகுதியில் குடிநீருக்கான பாதுகாப்பு எந்த அளவில் உள்ளது?

4. மின்சாரம் மற்றும் தெருவிளக்குகளின் வசதி?

5. மருத்துவ சுகாதாரம் எப்படி இருக்கிறது?

 - நந்தினி சுப்பிரமணி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close