Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெ உடல்நலம் திரும்ப வேண்டி கடலில் மிதந்தபடி பிரார்த்தனை!

ராமேஸ்வரம்: ஜெயலலிதா உடல்நலம் பெற்று திரும்ப வேண்டி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட இருவர் ராமேஸ்வரம் கடலில் மிதந்தவாறு பிரார்த்தித்தனர்.

உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று திரும்ப வேண்டி அதிமுகவினர் தமிழகம் முழுவதும் வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள். கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, ராமேஸ்வரத்தில் கடலில் மிதந்தவாறு பிரார்த்தனை செய்தார் சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா.

சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான கருப்பையா. நீரில் மிதந்தவாறு ஆசனங்கள் செய்வதில் தேர்ச்சி பெற்றவர். அவ்வப்போது தனது தொகுதியில் உள்ள குளம், ஊரணிகளில் நீரில் மிதந்து ஜலகிரிடை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட போது அதில் இருந்து மீண்டு வர வேண்டி சோழவந்தானில் உள்ள கோயில் குளத்தில் ஜலகிரிடை செய்து வேண்டுதல் நடத்தி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில், தற்போது ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் பசுமலை என்பவருடன் சேர்ந்து, மஹாளய அமாவாசை தினமான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் கருப்பையா ஜலகிரிடை செய்து பிரார்த்தனை செய்தார். இதுவரை குளம், ஊரணிகள் போன்றவற்றில் தன்னந்தனியாக ஜலகிரிடை செய்து வந்த கருப்பையாவுக்கு கடலில் ஜலகிரிடை செய்வது ஒரு வகை அச்சத்தை ஏற்படுத்தியது. இதனாலே பசுமலை என்பவரோடு இணைந்து ஜலகிரிடை செய்தார் என சொல்லப்படுகிறது.  சுமார் 30 நிமிடங்கள் இருவரும் கடலில் மிதந்தவாறு முதல்வருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

- இரா.மோகன்,

படங்கள்: உ.பாண்டி.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close