Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தரமற்ற தார் சாலைப்பணி... தடுத்து நிறுத்திய சிவில் இன்ஜினீயர்..!

 

விருதுநகர் : விருதுநகர் அருகே சாலை தரமில்லாமல் போடப்படுவதை கண்டறிந்து பொதுமக்கள் உதவியுடன் தரமற்ற பணிகளை தடுத்து நிறுத்தினார் சிவில் இன்ஜினீயரிங் படித்து விட்டு ஓட்டலில் வேலை செய்யும் இளைஞர்.

விருதுநகர் அருகே உள்ள மூளிப்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்தது எம்.சங்கரலிங்கபுரம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. ரூ.26.65 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான பணி நடந்து வந்தது. சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சாலை போடும் தெருக்களின் வழியே நடந்து சென்றனர். அதில் ஒருவரான சிவில் இன்ஜினீயரிங் முடித்து விட்டு ஓட்டலில் வேலை பார்த்து வரும் வீரச்செல்வன், தன் நண்பர்களிடம் சாலை தரமின்றி போடுவதாக புகார் கூறினார். "செம்மண் பரப்பில் இருந்து  4 செ.மீ., உயரத்துக்கு  தார் ஊற்ற வேண்டும். இதுதான் தார் ரோடு போடுவதற்கான விதிமுறை. ஆனால் 2 செ.மீ தூரத்துக்கு தான் தார் ஊற்றி இருக்கிறார்கள். இந்த ரோடு தாங்காது," என சொல்லியிருக்கிறார்.

வீரச்செல்வன் சிவில் இன்ஜினீயரிங் படித்தவர் என்பதால் இது தொடர்பாக பொதுமக்களிடம் சொல்லி, தரம் குறைந்த தார் சாலை அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தினர். சாலை மறியல் நடத்தி பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

இது தொடர்பாக வீரச்செல்வனிடம் பேசினோம். "அன்னைக்கு நானும், என் நண்பர்களும் டீ குடிக்க போயிட்டு வந்த போது தான் ரோடு போடுறதை பார்த்தேன். தரமில்லாம ரோடு போட்டுட்டு இருந்தாங்க. வழக்கமா தார் ரோடு போடும் போது ஜல்லி மற்றும் தார் கலவைகளை பரப்பி சமதளப்படுத்தி, அது மேல செம்மண் போட்டு பரப்பி அதுக்கு அப்புறம் தான் தார் ஊத்துவாங்க. செம்மண் பரப்பில் இருந்து  4 செ.மீ., உயரத்திற்கு  (அதாவது ‘‘ 2 ’’ இன்ச் )  தார் ஊத்தணும். இதுதான் தார் ரோடு போடுவதற்கான விதிமுறை. ஆனா 2 செ.மீ உயரத்துக்கு தான் தார் ஊத்தி இருந்தாங்க. டூவீலர் போனா கூட ரோடு பெயர்ந்து வந்துரும். இதை நண்பர்கள்கிட்ட சொன்னேன். எல்லோரும் ஒண்ணா சேந்து தரமில்லா தார் ரோடு போடுறதை தடுத்து நிறுத்திட்டோம்," என்றார்.

ரோடு போடும் கான்ட்ராக்ட்டர் வெங்கட சுப்புராஜை தொடர்பு கொண்டோம். "மாவட்ட நிர்வாகம் வழங்கிய நிதிக்கு அந்த அளவுக்குத்தான் ரோடு போட முடியும். அதற்கு மேல் தரமா போடணும்னா அந்த கிராமத்துக்காரங்க தான் போட்டுக்கணும்," என அலட்சியமாக கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

- எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close