Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக காங்கிரஸ் - தமிழ் மாநில காங்கிரஸ்: என்ன வித்தியாசம்?

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள வித்தியாசங்களை பார்க்கலாமா மக்களே!

1) தமிழ்நாட்டில் இயங்குகிற இந்திய தேசிய காங்கிரஸோட ஒரு மாநிலப்பிரிவுதான் இந்தத்  தமிழ்நாடு காங்கிரஸ்.  

1) தமிழ்நாட்டில் இயங்குகிற பல காங்கிரஸ் கட்சியில் ஒரு காங்கிரஸ் கட்சிதான் இந்தத் தமிழ் மாநில காங்கிரஸ்.(ஏதாவது புரியுதா?)

2) இந்தக் கட்சிக்கு எந்த நேரத்தில் கை சின்னத்தை சின்னமாக வெச்சாங்களோ, கையில் இருக்கிற அஞ்சு விரல்கள் மாதிரி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு  டிசைன்ல இருப்பாங்க.  
 

2) கட்சிதான் தனிமரமா இருக்கு. கட்சி சின்னமாச்சும் தோப்பாக இருக்கட்டுமேனு இரக்கப்பட்டு, பாவப்பட்டு, சங்கடப்பட்டு யாரோ வெச்ச சின்னமான தென்னந்தோப்புதான் இப்போதைக்கு இவர்களின் சின்னம்.
 

3) 'நடிச்சா ஹீரோ வேஷம்தான் சார். இல்லைனா வெயிட் பண்றோம்'னு அ.தி.மு.க., தி.மு.க. என செலக்டிவ்வான கட்சிகளுடன்தான் எப்போதும் கூட்டணி வைப்பார்கள். ஆனா எல்லாத்துலேயும் ஜெயிக்கிறாங்களானா... அது வேற டிபார்ட்மென்ட்.. அதெல்லாம் நமக்கெதுக்கு?

 

3) இவங்களுக்கு அப்படியெல்லாம் கூட்டணி விஷயத்தில் பெரிசா கொள்கையோ, கோட்பாடோ இருக்கிறதாகவே தெரியலை. அ.தி.மு.க.கூட கூட்டணி வெச்சிருக்காக...தி.மு.க. கூட கூட்டணி வெச்சிருக்காக.. நேத்து வந்த தே.மு.தி.க-வுடன் கூட்டணி வெச்சிருக்காக. அவ்வளவு ஏன், யாருக்குப் போட்டியாக கட்சி ஆரம்பிச்சாங்களோ அவங்ககூடவே  அதாங்க  காங்கிரஸ் கட்சிகூடவே  இவங்க கூட்டணியும் வெச்சிருந்தாங்க. பழம் நழுவி சரியாகப் பாலில் விழுந்தா திரும்ப  கூட்டணி  வைக்கிறதுக்கும்கூட வாய்ப்பு இருக்குதுனா பாத்துக்கோங்க மக்களே.

 

4) எந்தக் குடிசையைப் பார்த்தாலும் படக்கென உள்ளே நுழைந்து காய்ஞ்ச ரொட்டியையும் காரச் சட்னியையும் கேட்டு வாங்கி சாப்பிட்டு எளிமைக்கு என்ன  மூலக்கூறுனு  தெரியுமா எனப் பாடம் எடுக்கும் அளவுக்கு  எளிமையைக் கடைப்பிடிக்கும் தேசியத்தலைமையைக் கொண்டவர்கள் இவர்கள். 

4) ஜி. கே. வாசன் 'திரும்பி வந்துட்டோம்னு சொல்லு' னு த.மா.கா-வை மீளுருவாக்கம் செய்த மாநாட்டு நிகழ்ச்சிகளின்போது  செண்டை மேளத்துக்குப் பதிலாக ரெகார்டிங் செய்யப்பட்ட செண்டை மேள கேசட்டுகளைப் போட்டு எளிமையை(!) வளர்த்தெடுத்தவர்கள் இவர்கள். (இதெல்லாம் ஒரு உதாரணமான்னு கேட்கப்பிடாது.)

 

5) தம்பி நாங்க அட்டென்டென்ஸ் போடாத இடமே கிடையாது; ஆஜர் ஆகாத ஏரியாவே கிடையாது என  மோடியின் வேர்ல்டு மேப் டூருக்கு அடுத்து கட்சி விட்டுக் கட்சி  தாவி அதிகமாக டூர் போய் வந்த பெருமைக்காரரான திருநாவுக்கரசர்தான் தற்போதைய  தமிழக காங்கிரஸின் கேப்டன். 

5) தமிழ்நாடு காங்கிரஸுக்கும் தலைவராக இருந்து தமிழ் மாநில காங்கிரஸுக்கும் தலைவராக இருந்து 'ஆமா ஆக்சுவலா எந்தக் கட்சியிலதான் இப்போ நாம இருக்கிறோம் மாப்ள' எனத் தொண்டர்களையே குழப்பிவிட்டுக் குதூகலம் செய்த, செய்கிற ஜி.கே.வாசன்தான் தற்போதைய த.மா.கா தலைவர்.
6) 'சேச்சே...  நான் அழுகலையே லைட்டா கண்ணு வேர்க்குது'ங்கிற எஃபெக்ட்டில் எங்க கட்சிக்குள்ள கோஷ்டிப் பூசலெல்லாம் ஒருபோதும் இல்லையே... அதெல்லாம் சும்மா கிளப்பி விடுறது என இவர்கள் அடித்திருக்கும் ஸ்டேட்மென்ட் சிக்சர்தான் அரசியல் வட்டாரத்தில் இப்போதைய ஹாட் டாபிக். இதை சட்னினு சொன்னா சப்ளையர்கூட நம்ப மாட்டாரு.

 

6) சட்டமன்றத் தேர்தலில் போயஸ்கார்டன் கட் அண்ட் ரைட்டாகப் பேசி கறார் காமிக்க, யூ டர்ன் அடித்து ஏற்கெனவே இருந்த ஐந்து கட்சிகளுடன் ஆறாவதாக ம.ந.கூ-வில் சேர்ந்து மல்யுத்தம் நடத்தியது. தற்போது தூக்கி அடிக்கும் கட்சியையே தூக்கி அடித்துவிட்டு ரெஸ்ட் எடுத்தவர்கள் பழமும் கனியாமல் பாலிலும் விழாமல் தொடர்ந்துகொண்டிருக்க, வேற வழியின்றி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என தடாலடியாக அறிவித்திருப்பது இவர்களின் லேட்டஸ்ட் ஆக்டிவிட்டி.!

இன்னும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கு ஜி. அதை தெரிஞ்சுக்க இந்த வீடியோவை க்ளிக் பண்ணுங்க.

 

 

-ஜெ.வி.பிரவீன்குமார்


 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close