Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏன் பெரியாரைப் படிக்க வேண்டும்...? மனிதிகள் சொல்லும் காரணம்..!

கேரளத்தில் ஜிஷா, தமிழகத்தில் சுவாதி, வினுப்பிரியா, கலைச்செல்வி, பிரான்சினா என அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து ’மனிதி’ என்ற பெண்கள் குழு பேரணி நடத்தியது. நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணியை கல்வியாளர் வசந்திதேவி, கவிஞர் மற்றும் எழுத்தாளர் சல்மா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், வழக்கறிஞர் அருள்மொழி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே தொடங்கிய பேரணி காந்தி சிலையில் முடிவடைந்தது. பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசிய வசந்திதேவி, "இங்கு முதல் அடிமை பெண்தான், அவளுக்கு அடிமைத்தனம் நீங்கினாலே நாட்டில் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பெண் அடிமைத்தனம் நீங்க இந்தத் தலைமுறையினர் அனைவரும் பெரியாரைப் படிக்க வேண்டியது கட்டாயமாக்கப் பட வேண்டும். ஒரு கல்வியாளர் என்கிற முறையில் இது என் முதன்மையான கருத்து. ஆணவக் கொலை, அடக்குமுறை கொலை கடந்து அடுத்தகட்டமாகப் இப்போது பெண்களுக்கு எதிராகக் காதல் கொலைகள் அதிகரித்து வருகின்றன என்பது முரண்பாடன துன்பம். நீ என்னைக் காதலிக்கவில்லையென்றால் நீ வாழவே வேண்டாம் என, பட்டப்பகலில் பொது இடங்களில் வெட்டிச் சாய்க்கின்றனர் அல்லது ஆசிட் வீசுகின்றனர். பெண்கள் அனைவரும் இது மாதிரியான வன்முறைகளுக்கு எதிராக அணிதிரள்வது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. மேலும் ஆதிக்கத்துக்கு எதிரான கருத்துள்ள அனைத்து ஆண்களும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

அண்மையில் உடுமலைபேட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யாவும் பேரணியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “பெண்களுக்காக மட்டுமில்லை ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படும் அனைவருக்காகவும், சங்கரைக் கொன்ற சாதிக்கு எதிராகவும் சேர்த்துதான் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளேன்” என்றார்.
மனிதி குழுவின் சார்பாகப் பேசியவர்கள், “குழுவின் செயல்பாடுகள் பேரணியோடு நின்றுவிடாமல் அடுத்த கட்டமாக பெண்களுக்கு எதிரான எவ்வித வன்முறைக்கும் குரல் கொடுக்கும் வகையில் இருக்கும்” என்றனர்.

- ஐஷ்வர்யா

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ