Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனிதர்களுடன் போட்டியிட்டு மிஸ்டர். ஆலன் தட்டிய மெடல்!

கோவை : கோவையில் நடந்த மாரத்தான் போட்டியில் மனிதர்களோடு 10 கி.மீ. தூரத்தை தளராமல் ஓடி, மாரத்தான் ஃபினிஷர் எனும் தகுதியோடு மெடலை பெற்றுள்ளார் மிஸ்டர்.ஆலன்.

மாரத்தான் எனும் நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் என்பது இப்போது பரவலாக நடக்கத்துவங்கியுள்ளது. சமூக பொறுப்பின் ஒரு பகுதியாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக, தொடர்ச்சியாக மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவையில் புற்றுநோய் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த, 'கோயமுத்துார் மராத்தான் - 2016' எனும் பெயரில் மாரத்தான் போட்டிகள் நடந்தது

புற்று நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் நடை பயிற்சி அவசியம் குறித்து 5, 10, மற்றும் 21 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளில் நடந்த போட்டியில், எடுத்துக்கொண்ட தூரத்தை முடித்த ஃபினிஷர்களுக்கு மெடல் அணிவித்து கவுரவிக்கப்பட்டார்கள். அப்படி மெடல் பெற்ற ஃபினிஷர்களில் அனைவரையும் கவர்ந்தவர் ஆலன். இவர் ஓடியதோடு, மற்றவர்களையும் உற்சாகப்படுத்தி ஓட வைத்தவர் என்பது ஆலனுக்கு கூடுதல் கவுரவம். யார் அந்த ஆலன் என பார்க்கிறீர்களா? ஆலன் என்பவது ஒரு நாய்.

இது தொடர்பாக ஆலனின் பயிற்சியாளர் அலெக்ஸாண்டரிடம் பேசினோம். "ஆலனுக்கு தினமும் சிறப்பு பயிற்சிகள் கொடுத்து வந்தேன். பயிற்சிகளுக்கு பின்னர்தான் மாரத்தான் போட்டியில் பங்கேற்க வைத்தேன். 10 கி.மீ. தூரத்தை சர்வ சாதாரணமாக கடந்து வந்தான். ஒரு இடத்தில் கூட சோர்வாக நிற்கவில்லை. ஆலனின் வேகம் சிறப்பாக இருந்தது. மாரத்தானில் பங்கேற்ற மற்றவர்களையும் ஆலன் உற்சாகப்படுத்தினான். அனைவரும் ஆரோக்கியமான உடல்நிலையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் ஆலனை இந்த மாரத்தான் போட்டியில் பங்கெடுக்க வைத்தேன்." என்றார் உற்சாகமாக.

மெடல் வாங்கிய உடன் போட்டோகிராபர்களுக்கு உற்சாகமாய் போஸ் கொடுத்து விடைபெற்றார் ஆலன்.

- செய்தி மற்றும் படங்கள் : தி.விஜய்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ