Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்போலோவில் முதல்வரைப் பார்க்க தொண்டர்களின் குறுக்கு வழி இது...!

ஜெயலலிதா முதல்வராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் எதுவும் வெளியில் வருவது இல்லை. தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் விவரங்கள் குறித்து செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களை விடவும், 'அம்மா'வின் உடல் நலன் குறித்து தெரிந்துகொள்ளும் அக்கறையோடு தொண்டர்கள் மேற்கொள்ளும் வழிகள் நம்மை மலைக்க வைக்கிறது.

உள்ளே நுழைய

கிரீம்ஸ் ரோட்டில் இருந்து அப்போலோவுக்குள் நுழையும் மெயின் கேட் , பின் பகுதி என மருத்துவமனைக்கு வரும் அனைத்துப் பாதைகளையும் காவல் துறையினர் சீல் வைத்துக் கட்சிக்கார்கள் உள்ளே வர முடியாதபடி காவலுக்கு நிற்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் கடுக்காய் கொடுத்து விட்டு மிடுக்காய் உள்ளே வந்து விடுகின்றனர் தொண்டர்கள் . அப்படி வந்த சிலரை ஓரங்கட்டினோம். ''சார் போலீஸ் மெயின் ரோட்ல மட்டும்தான் மறிக்குறாங்க. அப்போலோ பின்னாடி இருக்குற ஸ்லம் ஏரியா வழியா வந்தோம்னா ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்குற அம்மா உணவகத்துக்கு வந்துரலாம். அதுவும் முடியலைன்னா காதர் நவாஸ்கான் சாலையில இருக்குற அப்போலோவோட மாஸ்டர் ஹெல்த் ஹாஸ்பிடல் வழியா வந்தால் உள்ள வந்துரலாம். இதுபோக கொச்சின் ஹவுஸ் வழியா ஒரு பாதை... இப்படி பல பாதை இருக்கு சார். போலீஸ் என்ன மிலிட்டரியே வந்தாகூட எங்களைத் தடுத்த நிறுத்த முடியாது" என கட்டை விரலைத் தூக்கிக் காண்பித்தனர்.

''சார் போலீஸ் மெயின் ரோட்ல மட்டும்தான் மறிக்குறாங்க. அப்போலோ பின்னாடி இருக்குற ஸ்லம் ஏரியா வழியா வந்தோம்னா ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்குற அம்மா உணவகத்துக்கு வந்துரலாம். அதுவும் முடியலைன்னா காதர் நவாஸ்கான் சாலையில இருக்குற அப்போலோவோட மாஸ்டர் ஹெல்த் ஹாஸ்பிடல் வழியா வந்தால் உள்ள வந்துரலாம். இதுபோக கொச்சின் ஹவுஸ் வழியா ஒரு பாதை... இப்படி பல பாதை இருக்கு சார். போலீஸ் என்ன மிலிட்டரியே வந்தாகூட எங்களைத் தடுத்த நிறுத்த முடியாது"

கெட் அப் மாத்து

ஜீன்ஸ் , டி.சர்ட் அணிந்துகொண்டு 'இங்க ஒண்ணும் பிரச்னை இல்ல' என போனில் தகவல் கொடுத்துக்கொண்டு இருந்தவர்களை ஓரங்கட்டினோம். ''வேட்டி கட்டிட்டு வந்தா போலீஸ்காரன் உள்ளே விட மாட்டேங்குறான். அதுதான் இந்த புது கெட்டப்பு. தினமும் வேற வேற டிரஸ் போட்டு வரணும். அப்பதான் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அது மட்டும் இல்ல அப்போலோ மெயின் பில்டிங்குக்கு எதிர்புறம் உள்ள கட்டிடத்துல பல் மருத்துவமனை இருக்கு. அங்க கன்சல்டிங் ஃபீஸ் 250 ரூபாய் கட்டி பதிவு செஞ்சு வச்சு இருக்கோம். அந்த சீட்டைக் காட்டி ஹாஸ்பிடல் உள்ள போயிடுவோம். அதுவும் 2 வது மாடியிலதான் இருக்கு. அங்க இருந்து எப்படியாவது அம்மாவ பாத்துரலான்னு... பல பேரு தினமும் பதிவு செஞ்சுட்டு காத்து இருக்காங்க. கடந்த வெள்ளிக்கிழமை வீட்டுக்கு போயிருவாங்கனு சொன்னாங்கள்ல.... அன்னைக்கு போலீஸ் கெடுபிடி அதிகம் இருக்கும்னு நெனைச்சு ஏகப்பட்ட பேரு முந்துன நாளே கன்சல்டிங் பீஸ் கட்டி இருந்தாங்க.இன்னும் சில பேரு உள்ள பேஷண்ட்டாவே அட்மிட் ஆகியிருக்கிறதாக சொல்றாங்க. எப்படியாவது அம்மாவைப் பாத்துரணும் சார்.... அதுக்குத்தான் இது எல்லாம்...'' என சொல்லி முடித்தனர்

வேட்டி கட்டிட்டு வந்தா போலீஸ்காரன் உள்ளே விட மாட்டேங்குறான். அதுதான் இந்த புது கெட்டப்பு. தினமும் வேற வேற டிரஸ் போட்டு வரணும். அப்பதான் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அது மட்டும் இல்ல அப்போலோ மெயின் பில்டிங்குக்கு எதிர்புறம் உள்ள கட்டிடத்துல பல் மருத்துவமனை இருக்கு. அங்க கன்சல்டிங் ஃபீஸ் 250 ரூபாய் கட்டி பதிவு செஞ்சு வச்சு இருக்கோம். அந்த சீட்டைக் காட்டி ஹாஸ்பிடல் உள்ள போயிடுவோம்.

உணவு & கழிப்பிடம்

தினமும் மருத்துவமனைக்கு ஏராளமான தொண்டர்களும் பத்திரிகையாளர்களும் வருவதால், மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ள கடைகளில் வியாபாரம் களை கட்டுகிறது. அங்கு பெட்டிக் கடை வைத்திருக்கும் நபர் இதுபற்றிப் பேசும்போது, ''கடந்த ஒரு வாரமா டீ, சிகரெட், பாக்கு வியாபாரம் அதிகமா இருக்கு.வெளியூர்ல இருந்து வர்ற தொண்டர்கள், 'எப்படியாவது அம்மாவைப் பாக்க ஏற்பாடு பண்ணுங்க.... எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்ல'ன்னு சொல்றாங்க. முடியாதுன்னு சொன்னா வியாபாரம் பாதிக்கும். அதனால, முயற்சி பண்றேன்னு சொல்லிடுறேன். உடனே ஊருக்கு போன்போட்டு, 'நெஜமாத்தான் சொல்றேன், அம்மா நல்லா இருக்காங்க.... வேணுன்னா நீயே கேட்டுப்பாரேன்'ன்னு போனை என்கிட்டக் கொடுத்துப் பேசச் சொல்றாங்க'' என நொந்துகொண்டார்.
மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள அம்மா உணவகத்துக்கு அதிகமானோர் சாப்பிட வருவதால் வழக்கமான அளவை விட அதிகமாக உணவுகள் தயாரிக்கப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். தினம் மூன்று வேளை பத்திரிகையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் 500 சாப்பாடுகளை அப்போலோ மருத்துவமனை வழங்கி வருகிறது. கொச்சின் ஹவுஸ் அருகிலுள்ள கட்டடத்தில் காவல் துறையினருக்கு கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

''200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரவு பகலா பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இதில், பாதிக்கும் மேல் பெண் போலீஸ்தான். ஆனால், எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் குறைவானக் கழிப்பறைகள்தான் இருக்கின்றன. எனவே, அந்தப் பகுதியில் உள்ள வீடுகளிலும் மருத்துவமனை உள்ளேயும் அவசரத்துக்கு ஒதுங்கிக் கொண்டு இருக்கிறோம்'' என ஆதங்கத்துடன் சொல்லி முடித்தார் பெண் காவலர் ஒருவர்.


நான் பாத்துட்டேன் பாத்துட்டேன்

மருத்துவமனையில் இருந்து யார் வெளிய வந்தாலும் 'அம்மா எப்படி இருக்காங்க?' என தொண்டர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். இந்த சூழ்நிலையில், வெளிநாட்டுக்காரர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வர, ''அவருதான் அம்மாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்குற டாக்டர். எனக்குத் தெரியும்'' என சிலர் அள்ளிவிட்டனர். அவ்வளவுதான் பெருங்கூட்டமாக அவரை சுற்றிவளைத்து வணக்கம் வைத்து விசாரிக்க ஆரம்பித்தது தொண்டர் கூட்டம். ஜெர்க்கான அந்த நபர், திருதிருவென விழித்தபடியே கூட்டத்திலிருந்து சிரமப்பட்டு தப்பினார்.

மற்றொரு பக்கம் முதல்வரை நேரில் பார்த்ததாக மருத்துவமனை வாசலில் நின்றுகொண்டு சிலர் 'கதை' சொல்ல அதனையும் ஆர்வத்தோடு கூட்டமாக நின்று கேட்டுக்கொண்டனர். நாமும் காதைக் கொடுத்தோம். ''ரெண்டாவது மாடிக்குப்போய் அங்க இருந்த நர்ஸ்கிட்ட ' பாப்பா நான் அம்மாவோட உண்மைத் தொண்டன் வந்து இருக்கேன். போய் சொல்லுமா'னு சொன்னேன். 'இருங்க போய் சொல்லிப் பாக்குறேன்'னு சொல்லிட்டு நர்ஸ் அம்மா இருந்த ரூமுக்குள்ள போய்ட்டு வந்துச்சு. 'வாங்க அம்மா உங்கள உள்ள கூப்பிடுறாங்க'னு சொன்னாங்க. ஓடிப்போய் பாத்தேன். 'ஏன் என்னப் பாக்க யாருமே உள்ள வரலை?'ன்னு கேட்டாங்க. 'யாரையும் உள்ள விட மாட்டேங்குறாங்கம்மா'னு சொன்னேன் (கூட்டத்தில் சிலர் கண்கலங்குகின்றனர்). 'எப்படிம்மா இருக்கீங்க?'ன்னு கேட்டேன். 'நான் நல்லா இருக்கேன்பா. ஆனா என்னப் பத்தி வெளில சொல்ற செய்தி எல்லாம் பாக்கும்போது ரொம்பக் கஷ்டமா இருக்கு. அந்த மாதிரி செய்தி எல்லாம் நம்ப வேண்டாம்'னு கட்சிக்காரங்ககிட்ட சொல்லு. நான் நல்லா இருக்கேன்'னு சொன்னாங்க'' என அவர் உணர்ச்சியோடு சொல்லி முடிக்க, 'இது போதும்பா...' என கதை சொன்ன நபரை எல்லோரும் சேர்ந்து பாராட்டினர். பின்னர் இதே 'கதை'யை அவர் போன் போட்டு பலருக்கும் சொல்ல ஆரம்பித்தார்.தினமும் இதேபோல நிறையபேர்  'நான் பாத்துட்டேன்... பாத்துட்டேன்' என மருத்துவமனை வாசலில் வந்து கதை சொல்லிக்கொண்டிருப்பதாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

''எத்தனை தடைகள் போட்டாலும், பாதுகாப்பு வளையங்கள் அமைத்தாலும் அத்தனையும் தாண்டி நாங்க வருவது 'அம்மா நல்லா இருக்காங்க'ன்ற செய்தியை கேக்கணும்னுதான். அம்மா இப்படி இருக்கும்போது எப்படி சார் நாங்க நிம்மதியா வீட்ல இருக்க முடியும்?''
- கண்களில் கண்ணீர் கசிய கேட்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். உயிருக்கு உயிரான இந்தத் தொண்டர்களின் அன்பு ஒன்று போதும்... அம்மா நலம் பெற!

- பிரம்மா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close