Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் பதுங்கிய ஐ.எஸ். தீவிரவாதி! மனைவி சொல்லும் தகவல்கள்

சென்னையில் பதுங்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதி பற்றி அவரது மனைவி பல திடுக்கிடும் தகவல்களை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பதுங்கிய ஐ.எஸ் தீவிரவாதி சுவாலி முகமது என்கிற யூசுப் என்பவர் கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம், எம்.ஜி.ஆர் நகர் அன்னை சத்யா சாலையில் உள்ள வாடகை வீட்டில் குடியிருந்துள்ளார். இவரது மனைவி ஜென்ஸி. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.  ஐ.எஸ் தீவிரவாதி சுவாலி முகமது குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கேரளாவில் பிடிப்பட்ட சுவாலி முகமதுவுக்கு இன்னும் இரண்டு பெயர்கள் உள்ளன. யூசுப், அபு ஹன்சா ஆகிய பெயர்களில் வலம் வந்துள்ளார். இவர், சென்னையில் 4 ஆண்டுகளாக குடியிருந்து வந்துள்ளார். தற்போதுள்ள அன்னை சத்யா சாலை வீட்டில் மூன்று மாதங்களாக வசித்து வருகிறார். கேரளாவில் ஐ.எஸ் அமைப்பு நடத்திய மீட்டிங்கில் பங்கேற்க கடந்த சில தினங்களுக்கு முன்பு சுவாலி முகமது சென்றபோது எங்களிடம் சிக்கினார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த அவர், சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்துள்ளார். அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் இவரும், இவரது மனைவியும் அதிகம் பேசுவதில்லை. தற்போது அவர் ஐ.எஸ். அமைப்பில் இருக்கும் தகவல் வெளியானதும் கொட்டிவாக்கம், அன்னை சத்யா சாலை பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவரது மனைவி ஜென்ஸியிடம் நடத்திய விசாரணையில் முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. தன்னுடைய கணவருக்கும், ஐ.எஸ் அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றே அவர் முதலில் தெரிவித்தார். பிறகு அதுப்பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறோம். அடிக்கடி வெளியூர் செல்வதாகவும், காலையில் வீட்டை விட்டு கிளம்பும் அவர் இரவில் வருவார். அடிக்கடி அவருக்கு போன் அழைப்புகள் வரும். அதில் பேசுபவர்கள் யார் என்று தனக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் சுவாலி முகமதுவின் செல்போன் நம்பரை போலீஸார், ஆராய்ந்து வருகிறார்கள். அவரது செல்போனுக்கு வந்த எண்கள் யாருடையது என்றும் விசாரணை நடந்து வருகிறது. கோவையிலிருந்தும், கேரளாவிலிருந்தும் அவரது செல்போனுக்கு அடிக்கடி போன் அழைப்புகள் வந்துள்ளன. அந்த எண்கள் குறித்த விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த சுவாலி முகமது வேலைப்பார்த்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. அப்போது, அவர் அங்கு யாரையாவது ஐ.எஸ் அமைப்பில் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டாரா அல்லது அங்கு இவரைப் போல ஐ.எஸ். அமைப்பில் உள்ளவர்கள் யாரும் இருக்கிறார்களா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் வேலைப் பார்க்கும் நிறுவன ஊழியர்களுக்கு சுவாலி முகமது குறித்த தகவல்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. 

நமது நிருபர்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ