Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த மனுவுக்கு தான் அரசு தரப்பிலிருந்து எனக்கு மிரட்டல் வரவில்லை!' - டிராஃபிக் ராமசாமி

ப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 12 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், மாநில அரசு முதல்வரின் உடல்நலம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த மாதம் 22-ம் தேதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர் வற்றுதல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் 12 நாட்களுக்குப் பிறகு தற்போது உடல்நலம் தேறி வருவதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அரசுத் தரப்பு இதுவரை எந்தவித அறிக்கையையும் வெளியிடாத நிலையில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை சாலை முழுவதும் போலீஸாரால் தடுக்கப்பட்டுள்ளது. இதனால், மற்ற நோயாளிகள் சென்றுவருவதற்கும் இடையூறாக இருக்கிறது. மேலும், அரசுத் தரப்பு முதல்வர் உடல் நலம் குறித்த தகவலை வெளியிட வேண்டும்’ எனக்  கூறியிருந்தார். இந்தநிலையில், அதன்மீதான விசாரணையை இன்று எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், ‘அரசுத் தரப்பு வழக்கறிஞர் நாளைக்குள் அதற்கான விளக்கத்தை அரசுத் தரப்பிலிருந்து பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தி.மு.க தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரும் முதல்வரின் உடல்நலம் தொடர்பான பதிலை அரசுத் தரப்பு அளிக்க வேண்டும் எனக் கூறிவருகின்றனர்.

இதுதொடர்பாக டிராஃபிக் ராமசாமியிடம் பேசினோம். ‘‘எப்போதும் என் மனுக்களுக்கு கட்சித் தரப்புகளில் இருந்து மிரட்டல் வரும். ஆனால், இந்த மனுவுக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. காரணம், அ.தி.மு.க தொண்டர்களுக்கே அவர்களது அம்மாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று தெரியாத நிலையில் அவர்களும் முதல்வரின் உடல்நிலை குறித்து விளக்கத்தை அறிய ஆவலாக இருக்கின்றனர். நல்ல பதில் வரும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

அரசுத் தரப்பு அமைதி காப்பது ஏனோ?

- ஐஷ்வர்யா

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ