Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடிக்கு கொய்யாப்பழம் பார்சல்... காவிரி பிரச்னைக்கு இப்படி ஒரு தீர்வா?

 

சென்னையிலிருந்து பிரதமர் மோடிக்கு கொய்யப்பழத்தை தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்பு உணர்வு சங்கம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்பு உணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன் கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தெளிவு இல்லாத நிலையில் இருக்கிறது. மது குடித்து போதையில் இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதை தெளியும். இதனால் பிரதமர் மோடிக்கும் நாங்கள் கொய்யாப்பழம் அனுப்ப முடிவு செய்தோம். நாங்கள் அனுப்பும் கொய்யாப்பழத்தை சாப்பிட்டு விட்டு அவர், காவிரி விவகாரத்தில் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை. இதற்காக இன்று பாடியில் உள்ள தபால் நிலையத்திலிருந்து பிரதமர் மோடிக்கு பார்சலில் கொய்யாப்பழம் அனுப்பியுள்ளோம்.

இந்தியா முழுவதும் மது விலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பி.ஜே.பி.யை சேர்ந்த அஸ்வின் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று மனுவை தள்ளுபடி செய்தது. அடுத்து இந்த வழக்கு மேல்முறையீடும் செய்யப்படவில்லை. இதனால் பிரதமர் மோடி மற்றும் பி.ஜே.பி.யைப் பாராட்டி கொய்யாப்பழத்தை அனுப்பியுள்ளோம்" என்றார். 

இதற்காக அம்பத்தூர் மார்க்கெட்டில் ஒரே ஒரு கொய்யாப்பழத்தை செல்லப்பாண்டியன் வாங்கியுள்ளார். அதை மோடியின் அலுவலக முகவரிக்கு 40 ரூபாய் செலவு செய்து தபாலில் அனுப்பியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடிக்கு கொய்யாப்பழம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

- எஸ்.மகேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close