Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீனவர்களைத் தாக்கி.. படகுகளை மூழ்கடித்து... மீண்டும் அத்துமீறும் இலங்கை கடற்படை!

 

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் பகுதியில் கடலில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களை மீண்டும் தாக்கி, விரட்டியடித்துள்ளது இலங்கை கடற்படை. படகையும் இலங்கை கடற்படையினர் சேதபடுத்தியதால், 5 மீனவர்கள் கடலில் நீந்தி, பிற மீனவர்களின் உதவியோடு உயிர்பிழைத்து வந்தனர்.

ராமேஸ்வரம் பகுதியில் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக இலங்கை ராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500க்கும் மேற்பட்ட படகுகளில்  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

மீனவர்கள் கச்சத்தீவு அருகே பாக் நீரிணை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாது விரட்டியடித்தனர். 10-க்கும் மேற்பட்ட படகுகளில் வலைகளை அறுத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அந்தோணிகுரூஸ் என்பவரது படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது.

படகிலிருந்த  ஆன்ட்ரூஸ், ஜெகன், ரபோ, நாகராஜ், உமையன் ஆகிய 5 மீனவர்களும் கடலில் குதித்து நீந்தியபோது அருகில் வந்த  படகுகளிலிருந்த மீனவர்கள் அவர்களை காப்பாற்றினர். இலங்கை பிரதமர் ரணில்விக்ரமசிங்கே இந்தியா வந்துள்ள நிலையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இருக்காது என எண்ணியிருந்த நிலையில், மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதலை நடத்தி அத்து மீறல்களில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்டபாக, ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க கூட்டம் நடந்தது. இலங்கை அரசின் பிடியில் உள்ள 115 படகுகளை மீட்கக் கோரியும், சிறையில் உள்ள 5 மீனவர்கள விடுவிக்கக் கோரியும் நாளை (7ம் தேதி) முதல் வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை முன்வைத்து, ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பட்டமும் நடத்தினர்.

- இரா.மோகன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ