Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எய்ம்ஸ் மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் முதல்வர் : அப்போலோ அறிக்கை


முதல்வர் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று 9-வது முறையாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், பல்வேறு நிபுணர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் தமிழக முதல்வர். தேவையான செயற்கை சுவாச உதவி, நோய் எதிர்ப்பு மருந்துகள், ஊட்டச்சத்து சிகிச்சை தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் உதவியில்  பிஸியோதரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.


எய்ம்ஸின் பல்மினரி மருத்துவத் துறையின் கில்னானி நேற்றும் இன்றும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலையை பற்றி நிபுணர்களுடன் ஆலோசித்தார். கில்னானி அப்போலோ மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அறிக்கை...

 


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ