Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தந்தையின் புகழை களங்கப்படுத்தவே அவதூறு: போலீஸில் அழகிரி புகார்

எனது தந்தையின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே அவதூறான தகவல் பரப்பப்பட்டுள்ளது என்றும், அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மு.க.அழகிரி புகார் அளித்துள்ளார். அழகிரி சார்பில் அவரது வழக்கறிஞர் யுவராஜ் சேகர் அளித்துள்ள புகார் மனுவில், உள்ளாட்சித்தேர்தல் பற்றி நான் கூறாத கருத்துகளை தவறாக சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளனர். எனது தந்தை மீது நான் கொண்டுள்ள விசுவாசம் கேள்விக்கு அப்பாற்பட்டது. எனது, தந்தையின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே அவதூறான தகவல் பரப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் தவறான தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ