Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் உடல்நிலை அறிய அமித்ஷா, அருண்ஜெட்லி நாளை சென்னை வருகை

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை அறிய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் நாளை சென்னை வருகின்றனர்.

உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அப்போலோ மருத்துவமனை சென்று மருத்துவர்களிடம் கேட்டறிந்து வருகின்றனர். கடந்த வாரம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு திடீரென வருகை வந்து, முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். ராகுலின் இந்த திடீர் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், முதல்வரின் உடல்நிலை அறிய மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் நாளை சென்னை வருகின்றனர். மாலை 3 மணிக்கு அப்போலோ மருத்துவமனை செல்லும் அவர்கள், முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிகிறார்கள். அவர்கள் இருவரும் அப்போலோ செல்வதைத் தவிர வேறு பயணத்திட்டம் எதுவும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close