Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆகாயம் பார்த்தபடி கண்ணாடி ரயில் பயணம்!

யில் பயணங்கள் என்று கூறியதும் நாம் சிறு வயதில் அப்பா அம்மாவுடன் டெல்லிக்கு டூர் சென்றது, கோடை விடுமுறைக்கு தாத்தா பாட்டியை பார்க்க சொந்த ஊருக்கு சென்றது, குடும்பத்துடன் "மானஸ சஞ்சரரே" என்று கோவிலுக்கு வழிபட சென்றது என பல சுவையான அனுபவங்கள் நம் மனதை தொட்டு செல்லும். நம் பயணங்களின் அனுபவங்களை ரயில்களின் ஒலியும், நம்முடன் பயணம் செய்தவர்களுடன் நாம் அடித்த அரட்டையும் மேலும் சிறப்பித்தன. என்ன தான் விமானத்தில் அடிக்கடி பயணம் செய்தாலும், நமக்கு நிம்மதியளித்து பயணம் செய்த முழு மன நிறைவை தருவது ரயில் பயணங்கள் தானே?

இவ்வாறு மனிதர்களுடன் மிக நெருக்கமான உளவியல் தொடர்பை கொண்ட ரயில் பயணங்களின் அனுபவத்தை மேம்படுத்த ரயில்வே அமைச்சகம் புதுவிதமான ரயில் பெட்டிகளை அறிமுக படுத்தவுள்ளது. கண்ணாடி கூரைகளை கொண்ட இந்த பெட்டிகள் பயணிகள் ரயிலை சுற்றி இருக்கும் இயற்கை காட்சிகளை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதைப் பற்றி பேசிய இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா வாரியத்தின் (IRCTC) தலைவர் ஏ.கே. மனோச்சா கூறியது,

"இந்திய மற்றும் அயல்நாட்டு சுற்றுலா பயணிகளின் கவனத்தை ரயில் பயணங்களின் பக்கம் ஈர்க்கவே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி, ஆய்வு, வடிவமைப்பு மற்றும் தர வாரியம், சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.ஃஎப் ஆகிய மூன்று நிறுவனங்களும் சேர்ந்து இந்த பெட்டிகளை வடிவமைத்துள்ளோம். டிசம்பர் மாதம் முதல் இந்த பெட்டிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், விசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கிலும் ஓடும் ரயில்களில் இப்பெட்டிகள் சேர்க்கப்படும். முழுமையாக இந்த பெட்டியை மட்டுமே கொண்ட ரயில்களைப் பற்றி ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும். சுவிச்சர்லாந்து நாட்டில் இதுபோன்ற பெட்டிகள் ஏற்கெனவே இயக்கப்பட்டு வருகின்றன. இனி இந்திய பயணிகளுக்கு இயற்கையை ரசிக்கும் சுவையான அனுபவங்களை ரயில்வே தரும்"

கண்ணாடி கூரைகளைத் தவிர, நவீன பொழுதுபோக்கு சாதனங்களும் இந்த பெட்டிகளில் இடம் பெறும். நான்கு கோடி ரூபாய் செலவில் இந்த பெட்டிகள் அமைக்கப்படுகின்றன.

- ம. சக்கர ராஜன்
(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ