Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா நலம் பெற சுப. உதயகுமார் வாழ்த்து 

முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்று பச்சைத் தமிழகம் கட்சி சுப.உதயகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் கொள்கைகளில், செயல்பாடுகளில், திட்டங்களில் எனக்கு கிஞ்சிற்றும் உடன்பாடு கிடையாது. ஆனாலும் ஒரு சக மனிதராக உடல்நலம் குன்றி அவர் பெரிதும் துன்புறுவதைப் பார்த்து உளபூர்வமாக வருந்துகிறேன். அவர் விரைவில் நலம்பெற எனது விழைவினை தெரிவித்துக் கொள்கிறேன். அப்போலோ மருத்துவமனை சென்று அவரின் உடல்நலம் பற்றி விசாரிக்கும் தகுதி பெற்ற தலைவரல்ல நான். மேலும் அங்கே நடக்கும் கேலிக்கூத்துக்களிலும் எனக்கு உடன்பாடில்லை. செல்வி ஜெயலலிதா அவர்கள் விரைவில் நலம் பெறட்டும்" என்று தெரிவித்தார்.

 

-ஆன்டனிராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ