Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துண்டு துண்டாக கிடந்த ரூபாய் நோட்டுகள் யாருடையது என கண்டுபிடிப்பு

கடலூர் அருகே துண்டுதுண்டாக கிடந்த ரூபாய் நோட்டுகள் யாருடையது என காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், குச்சிபாளையத்தில் துண்டுகளாக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.தற்போது, இந்த ரூபாய் நோட்டுகள் யாருடையது என காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த மரக்கடை உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் என்பவரது பணம் என்று தெரியவந்துள்ளது. இதனிடையே, மரக்கடையில் ஒரு மூட்டை வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் காணவில்லை என புகாரின் பேரில் இதனை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "ரிசர்வ் வங்கி ஏலத்தில் ரூபாய் நோட்டுகளை வாங்கினேன். ஆலைகளில் எரியூட்ட ரூபாய் நோட்டுகள் வாங்கி வரப்படுகின்றன" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ