Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கள்ள நோட்டை புழக்கத்தில்விட முயன்றவர் கைது! 

சென்னை ஆலந்தூரில் கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். காய்கறி வியாபாரியிடம் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்றபோது, போலீசார் அவரை கைது செய்தனர். தப்பியோடிய மற்றொருவரை பிடிக்க பரங்கிமலை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ரூ. 2.65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பணம் தற்போது ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கள்ள நோட்டு விவகாரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ