Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவல்துறையிடம் மக்களின் எதிர்பார்ப்பு இவைதான்! ஐ.ஜி.-யின் அதிரடி சர்வே

மிழக காவல்துறை நலன் ஐ.ஜி ஆக இருப்பவர் டேவிட்சன் ஆசீர்வாதம். தமிழக காவல்துறை உயரதிகாரிகளில் சமூக வலைத்தளங்களில் பொதுமக்களுடன் நேரடி கொண்ட காவல் உயரதிகாரிகளில் முக்கியமானவர் இவர். அவ்வப்போது சமூகக்கருத்துக்களை தனது முகநுால் பக்கத்தில் பதிவிடுவார். காவல் உயரதிகாரி என்றாலும் தனது பக்கத்தில் தான் வெளியிடும் கருத்துக்கு மாற்றுக்கருத்து அல்லது அதற்கு எதிர்வினையான கருத்துக்கள் பதிவிடப்பட்டாலும் அதற்கும் நாகரிகத்துடன் பதிலளிப்பார் உடனுக்குடன். நேற்று அவர் தனது பக்கத்தில் , 'காவல்துறையிடம் உங்களது எதிர்பார்ப்புகள் என்ன' என்ற கேள்வி பாணியிலான ஒரு பதிவை போட்டிருந்தார்.

இப்படி ஒரு கேள்வியை வேறு யார் பதிவிட்டிருந்தாலும் அது வழக்கமான கேள்வியாக கடந்துபோயிருக்கும். அல்லது நெட்டிசன்கள் இதுதான் சமயம் என்று காவல்துறையை கலாய்த்து தள்ளியிருப்பார்கள். ஆனால் கேட்டவர் பொறுப்பான காவல் அதிகாரி என்பதால் அவரது இந்த பதிவு(கேள்வி)க்கு வந்த பதில்கள் சுவாரஷ்யமாகவும் பொறுப்புடனும் இருந்தன.

ஐடி துறை முதல் அப்பளம் விற்கும் அழகேசன் வரை என வயது தகுதி அனுபவம் வித்தியாசமின்றி முகநுாலில் புழங்கினாலும் இந்த பதிவிற்கு ஆரோக்கியமான தங்கள் கருத்துக்களை வழங்கியிருக்கின்றனர் நெட்டிசன்கள். இந்த பதிவிற்கு வந்த முதல் நுாறு பதில்களை ஆராய்ந்தோம்.  பாதிக்கு மேற்பட்டவர்கள் காவல்துறை லஞ்சம் புழங்காத துறையாக செயல்பட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். காவல்துறையினர் புகார் தரச் செல்லும் பொதுமக்களிடம் தரக்குறைவான வார்த்தைகளை கையாள்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று நிறைய பேர் தெரிவித்திருந்தனர். நேர்மை, மனிதாபிமான உணர்வு, அரசியல் தலையீடு இன்றி செயல்படுவது, பாரபட்சமற்ற நடவடிக்கை , மனசாட்சியுடன் செயல்படுவது, துணிச்சலான நடவடிக்கை இவைதான் பலரும் காவல்துறையிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்பது இந்த பதில்களில் புரிந்துகொள்ளமுடிகிறது.

பொதுமக்கள் பொங்கித்தீர்த்த இன்னும் சில சுவாரஷ்யமான பதில்கள் இதோ...

Dhayalan Ramaiyan சாமானியர்களை மரியாதையாக நடத்தவேண்டும் , வயதானவர்களை கூட வாடா போடா என்று அழைக்கிறார்கள் குறிப்பாக ஏழை எளியவர்களை. பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையம் செல்ல பயப்படுகின்றனர். பெரும்பான்மையினர் , அரசியல் செல்வாக்கு உடையவர்கள் , பணம் படைத்தவர்கள் என்ற பாகுபாடு காட்ட கூடாது.

Vijayaraj துணிச்சலான விரைவு நடவடிக்கை

Ramanathan Palanisamy நீக்கமற நிறைந்திருக்கும் லஞ்சம் முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டும்.

Siva Chandran காவல்துறை பணியை மனசாட்சியோடு செய்வது....I once was caught for i did not wear my helmet. I had it in my tank top coz it was drizzling. I know as per the rules I should wear. I apologized my fault and paid the fine. But he told me 'naai' (Dog). Being a public what more I can do other than arguing!? Those things has to be changed from the police end!!

ராம்குமார்

காவல்துறை உங்கள் நண்பன் ...
வாக்கியங்கள் அருமை...
வாழ்க்கையில் அல்ல...

Mani Maran நேர்மை, பக்கச்சார்பின்மை

Prithvi Jak Sparow A better treatment and a friendly approach manGnanadesikan Sethupathy Humanity. Dedicated duty.

Thirugnana Sambandam; Be Friendly ..Not treat all as Accused..If only Station become a place for Public to Approach easily then Crime rate reduces

Stalin Pushparaj அரசியல் தலையிடு இல்லாத காவல்துறை தேவை

Lieut Esan Actually NIL Sir...... there are equal no of good and reasonable cops everywhere...... it all depends on how you treat them

Simba Lion Prince Their duties are clear Sir. wish they stick to thier basic in treating and looking after people... and in doing so , they be given full freedom to execute thier duties with sense of pride and satisfaction.

Senthil Nallamuthu நேர்மையான செயல்பாடு இருந்தாலே போதும்

Marudamuthu Pavendan கனிவும் துணிவும்! வீரமும் ஈரமும்!! உண்மையும், நேர்மையும்!!!

Mareena Hawkes Should have Spinal bone sir..... Nothing else.

Guru Vengudupathi அப்பாவிகளை டார்ச்சர் செய்வதை நிறுத்தவேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கூஜா துாக்குவதை விட்டு யார் தவறு செய்தாலும் ஆக்ஷன் எடுங்க

Venkat Venkatesh காக்கியை வைத்து பிழைக்காமல் காக்கியை விற்று தான் பெரும்பான்மையோர் வாழ்கிறார்கள். அவர்களுக்கு காக்கியை நேசிக்க கற்றுக் கொடுங்கள். சமூகத்தில் பெரிய மாற்றத்தை காணலாம்.

rajesh “காவல் துறை காவல் துறையாக இருக்க வேண்டும்.
கறக்கும் துறையாக இருக்க கூடாது“

Amudha Kumar முதலில் பொதுமக்களை மதிக்க கற்றுக்கொடுங்கள். ஒரு முறை பாண்டி பஜாரில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டி விபத்தை ஏற்படுத்த இருந்த ஒருவனை கண்டித்தேன். இதுதொடர்பாக காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டேன். அங்கு என்னைப்பற்றிய விபரத்தை கேட்டுக்கொண்ட போலீஸார் என்னிடம் அவமரியாதையாக பேசியதோடு என்னிடம் 1000 ரூபாயை தந்துவிட்டு செல் என்றார்கள். அந்த போதை ஆசாமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவலரிடம் நான் எந்த தவறையும் செய்யவில்லை என மன்றாடியும் கேட்கவில்லை. அப்போது இளம்வயது அதிகாரி அங்கு வந்தார். அவரும் என்பேச்சை கேட்காமல் காவலர் சொன்னதை கேட்டு திடீரென என்னை அறைந்தார். அதிர்ந்துபோனேன். என் பக்க நியாயத்தை கொஞ்சமும் கேட்காமல், 'இதுதான் உனக்கு கடைசி போய்விடு' என்றார். நான் நிலைமையை சமாளிக்க அங்கிருந்து நகர்ந்தேன்.

Shalom Kshetran Respect public and corruption free, stop kattapanjayathu

Prince Devadason Immanuel Not get influenced to file a false case...

Diaz Immanuvel Should come out of the caste quota favoured by the ruling party Sir.Shalom Kshetran Each and every police man from constable to higher officials should work like sagayam IAS,sailendra babu IPS and Davidson Devasirvatham IPS

Periasamy Balasekar For the people. With the people

Diaz Immanuvel Should come out of "BRITISH COLONIAL MINDSET" &realise they too one of the PuBLIC DEPARTMENT to serve the people.Sir.

Jaishankar Karuppannan Sir, Please form a coalition of senior officers and lobby to scrap the outdated, out moded Indian Police Act 1861 and this one move will make everything fall in line.

Kesava Prakash Our TN Police is equal ant to Scotland police.. We should maintain that at any cost..Bcz now a days our people need this only sir.

Bellie G Babu A Qualities of Police for Democratic Society
Representative and Collaborative, Educated and well trained, Effective and preventive, Honesty, Peacekeeper & Protector, Respectful, Restrained as Servant leader and finally Unbiased

Srikumar Balakrishnan Polite with needy and tough with criminals.
Chandira Kumar We people should change ! We people should not expect in change in others , we should see change In ourselves , so that we can minimise the service from police department

Muneer Peeran சுயலாபமின்றி மக்களின் பிரச்சனைகளை நேர்மையுடனும் லஞ்சம் இல்லாமல் தீர்க்க வேண்டும். ஜாதி மத பாகுபாடு இன்றி செயல்பட வேண்டும்...

Joan Elango Courage to stand for the truth.

Krishnan Ananthan Free and fair police force,not yielding to any pressure ,political or powerful (money). Accessible to the common man. Use of Information
Technology, better service conditions,career growth and no interference from outside will help to achieve this. Police is very much part of the society and reflects those values only, people as whole need to change.

Watrap V S Raj வேலி பயிரை காக்கவேண்டும். ஆனால் பல இடங்களில் ....... மேய்கிறது. இதை தவிர்த்தால் போதும்.

Ubaidullah Hyderali Many police station pathetic condition.improve it. infrastructure. When police training must include yoga.Ks Rajesh Man, with due respect, when there are lot many issues pending like chain snacthing, etc end of the month hiding in darkness n checking for helmet. RC book licence etc should be minimized...that's are conducted just for collecting money..Man why can't be introduced like kerala online filing complaints...rather then going to any police stations, because many times they don't treat the people with deginity....

Arumugam Saran மனிதாபிமானம் ,

Giftson Raja; மரியாதை

Umanaath Venkatachalam; Soft and welcoming approach towards innocent people...... Iron fist against suspected culprits..... Zero lenience against Political Interference..... Third degree treatment for drunken drivers causing accident in mid nights irrespective of their father's social status..... enforcing severe action against rapists/child abusers, while showing caring approach towards victims....

K.t. John Police are public servants, first and foremost. Respect for all, fairness in dealings, incorruptible nature and dedication to the profession.

M Mrithika Santhoshini ஏழை பணக்காரன்  என்ற பேதம் களையவேண்டும்.

கொடூர குற்றங்கள் புரிந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும்போது கறுப்புத்துணி கொண்டு மறைத்து செல்லக்கூடாது. அவனது முகம் பொதுமக்களுக்கு அறிமுகமானால் நாளை அவனிடம் ஜாக்கிரதையாக இருக்கலாமே... அத்தகைய கொடூர குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் முகங்களை காட்டி சமூகத்தால் அவமானப்படும் நிலையில் குற்றவாளிகளின் எதிர்காலத்தை மடடும் கருதி ஏன் முகம் மறைக்கவேண்டும்?...இனிவருங்காலங்களில் தவிர்க்கவேண்டும்.

 

நகை பறிப்பு ஈவ் டீசிங் போன்ற குற்றங்களை களைய பொதுமக்களோடு மக்களாக மஃப்டி போலீஸார் நிறைய அமைக்கவேண்டும். மக்களிடம் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் பற்றி புகார் தெரிவிக்க ஒரு ஹெல்ப் லைன் மற்றும் வாட்ஸ் அப் எண் அவசியம். -இப்படி
ஆலோசனைகளை அள்ளிக்கொட்டி இருக்கின்றனர் பொதுமக்கள்.

இந்த பதிவில் மேலும் சில சுவாரஷ்யங்கள் நடந்தன. 'காவல் உயர் பதவியில் இருப்பவர்கள் ஒரு முறையேனும் துபாய் காவலர்களை சந்தியுங்கள். மனிதம் மனிதாபிமானம் என்பதற்கு அர்த்தம் விளங்கும்' என்ற ஒருவரின் பதிவிற்கு காவல்துறையை சேர்ந்த ஒருவருக்கும் அவருக்கும் நடந்த முட்டல் மோதல் தனி சுவாரஸ்யம்.

இன்னொரு நெட்டிசன், , இதையெல்லாம் நாங்க சொல்லி அதை நீங்கள் உயரதிகாரிக்கு தெரிவித்து அதனால் எதிர்காலத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்ற ஐயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இப்படி ஒரு பதிவை இட்டது ஏன் என டேவிட்சன் ஆசிர்வாதம் ஐ.பி.எஸ் அவர்களிடமே கேட்டோம். “ டிசம்பரில் நடைபெற உள்ள காவல்துறை மாநாடு ஒன்றிற்காக தமிழக காவல்துறை சார்பாக, 'பீப்பிள் எக்ஸ்பெக்டேஷன்ஸ் அண்ட் பீப்பிள் பார்ட்டிசிபேட் அண்ட் கோ ஆபரேஷன்ஸ்' என்ற தலைப்பில் ஒரு பிரசன்டேஷன் அளிக்க இருக்கிறோம். பொதுமக்களுடனான கலந்துரையாடலுக்குப்பின் தயாரிக்கப்பட்ட அந்த உரை பொதுமக்களின் கருத்துடன் ஒத்துப் போகிறதா என்பதை அறிவதற்காக முகநுாலில் பதிவிட்டு பொதுமக்களின் ஆலோசனைகளை கேட்டிருந்தேன். எல்லாதரப்பு மக்களும் முகநுாலில் இயங்குவதால் பரவலான கருத்து கிடைக்கும் என்று நம்பினேன். அப்படியே நல்ல ஆலோசனைகள் கிடைத்திருக்கின்றன.

ஆச்சர்யமாக, கிடைத்திருக்கும் பதிவுகள் பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி முன்கூட்டியே நாங்கள் தயாரித்திருந்த ஆலோசனைகளுடன் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன. தமிழக காவல்துறையின் பணியை இன்னும் மேம்படுத்தி மக்களுக்கு இன்னும் சிறப்பான சேவையை அளிப்பதே இதன் நோக்கம்” என்றார்.

காவல்துறையை மேம்படுத்த உங்களுக்கும் சில யோசனைகள் உள்ளதாக மக்களே....நீங்களும் அவரது முகநுால் பக்கத்திற்கு சென்று உங்கள் ஆலோசனைகளை சொல்லலாமே...https://www.facebook.com/ddevasirvatham?fref=ts

- எஸ்.கிருபாகரன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close