Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதோடு, படகுகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் மீனவர் ஜெபமணி படுகாயம் அடைந்தார். மேலும் மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர். படுகாயம் அடைந்த ஜெபமணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலால் மீனவர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். மத்திய, மாநில அரசு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close