Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

61 மாவட்ட காங். தலைவர்களுடன் திருநாவுக்கரசர் ஆலோசனை

சென்னையில் 61 மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் 61 மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, எச்.வசந்தகுமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

உள்ளாட்சித் தேர்தல், காவிரி பிரச்னைக்காக திருச்சியில் நடைபெற உள்ள உண்ணாவிரதம் உள்ளிட்டவைகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

படங்கள்: ஆ.முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ