Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓடும் அரசு பேருந்தில் பயணி சுட்டுக்கொலை: சாத்தூரில் பயங்கரம் 

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து கோவையை நோக்கி அரசு பேருந்து பஸ் இன்று காலை சென்று கொண்டிருந்தது. கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் ஏறி கோவை செல்ல டிக்கெட் எடுத்தார். அப்போது இரண்டு மர்மநபர்கள் சாத்தூர் அரசு பஸ் டிப்போ முன்பு அதே பஸ்சில் ஏறினர். சாத்தூரில் இருந்து விருதுநகர் நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது.

சாத்தூர் படந்தால் என்ற ஊர் அருகில் பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென்று எழுந்த மர்மநபர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கருப்பசாமியின் நெஞ்சில் சுட்டனர். இதில் கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார். பிறகு டிரைவரை துப்பாக்கி காட்டி மிரட்டி பஸ்சை நிறுத்த சொல்லி அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி சென்றனர். தகவல் அறிந்த சாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் எஸ்.பி. ராஜராஜன் உள்பட போலீஸ் அதிகாரிகள் சாத்தூரில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கொலையாளிகள் திட்டமிட்டு கருப்பசாமியை பின் தொடர்ந்து வந்ததும், சாத்தூரில் ஏறிய அவர்கள் விருதுநகருக்கு பஸ்சில் டிக்கெட் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

ஓடும் பேருந்தில் பயணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சாத்தூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.கார்த்தி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ