Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்க பிஸ்கட்டா? தகர பிஸ்கட்டா? -இப்படியும் ஒரு சீட்டிங்

தங்க பிஸ்கட்களுக்குப் பதில் இரும்பு ராடுவைக் கொடுத்து ஏமாற்றிய நகை வியாபாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை ஆழ்வார் திருநகர், காந்தி சாலைக்ச் சேர்ந்தவர் ரகுராம். தங்க நகை வியாபாரி. இவருக்கும் ஆலந்தூர் அருகே உள்ள உள்ளகரம் வி.வி. சாமிநாதன் தெருவை சேர்ந்த சம்பத்குமாருக்கும் பல ஆண்டுகளாக பிசினஸ் ரீதியான பழக்கம் இருந்து வருகிறது. 
சில நாட்களுக்கு முன்பு ரகுராமிடம் போனில் பேசிய சம்பத்குமார், '5 கிலோ தங்க பிஸ்கட்கள் இருக்கின்றன. அதை ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கலாம்' என்று பிசினஸ் பேசி முடித்துள்ளார். அதற்கு ரகுராமும் சம்மதம் தெரிவித்தார்.

தொடர்ந்து, தங்க பிஸ்கட்களை வாங்க ரகுராமை, யானைகவுனி துளசிங்கம் தெருவுக்கு வரச்சொன்னார் சம்பத்குமார். அதன்படி நேற்றிரவு அங்கு ரகுராம் சென்றார். அப்போது அங்கு வந்த சம்பத்குமார், தங்க பிஸ்கட்கள் இருப்பதாக கூறி ஒரு பையை ரகுராமிடம் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட அவர், ஒரு கோடி ரூபாயை சம்பத்குமாரிடம் கொடுத்தார். பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்பினர். சிறிது தூரம் சென்ற ரகுராம் அந்தபையை திறந்து பார்த்தார். அப்போது அவர் அதிர்ச்சியடைந்தார்.

பையில் தங்க பிஸ்கட்களுக்குப் பதில் 5 கிலோ எடை உள்ள இரும்பு ராடு ஒன்று இருந்தது. உடனடியாக  சம்பத்குமாருக்கு அவர் போன் செய்து விவரத்தை சொல்ல முயன்றார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதன்பிறகுதான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரகுராம், இரும்பு ராடுவுடன் சென்று யானைகவுனி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய சம்பத்குமாரை தேடி வருகின்றனர்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "தங்க பிஸ்கட் எடைக்கு ஏற்ற வகையில் 5 கிலோ எடையில் இரும்பு ராடுவை சம்பத்குமார் எடுத்து வந்துள்ளார். இதனால் அவர் திட்டமிட்டே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். நகை வியாபாரி ரகுராமை நம்பிக்கை மோசடி செய்துள்ளார் சம்பத்குமார். அவர் பிடிப்பட்டால் மட்டுமே இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற விவரம் தெரியவரும்" என்றனர். 

- எஸ்.மகேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close