Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கர்நாடகாவில் வெற்றி பெற தமிழகத்தை புறக்கணிக்கிறது மோடி அரசு: முத்தரசன்

கர்நாடகாவில் வெற்றி பெற தமிழ்நாட்டை மோடி அரசு புறக்கணிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.

தி.நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், தொழில்நுட்பக்குழு அறிக்கை மூலம் அவசரச்சட்டம் கொண்டு வரப்படும் என்பது அளவுக்கு மீறிய நாடகம் என்றார்.

மேலும், வரும் 17, 18 ஆகிய தேதிகளில் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என்றும், தண்டவாளங்களில் அமர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்பர் என்றும் முத்தரசன் கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ