Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வருக்காக திருச்செந்தூர் கோயிலில் யாகம் நடத்திய அமைச்சர்கள் 

முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு யாகம் இன்று நடைபெற்றது. இந்த யாகத்தில் அமைச்சர்கள் 4 பேர் பங்கேற்றனர்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் நலம் பெற வேண்டிய அதிமுகவினர் சிறப்பு வழிபாடு, தொழுகை, பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டி சிறப்பு யாகத்தை நடத்தி வருகிறார்கள் அதிமுகவினர். இதில், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

- இ.கார்த்திகேயன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close