Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் பற்றி வதந்தி: டிராபிக் ராமசாமி மீது போலீசில் புகார் 

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பும் வகையில்  செயல்பட்டு வரும் டிராபிக் ராமசாமி மற்றும் அவரது உதவியாளர் பாத்திமா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். 22 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரபரப்பட்டு வருகின்றன. காவல்துறையினரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அதையும் மீறி வதந்திகள் பரபரப்பட்டு வருகின்றன.

இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக கூறி இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று தனியார் வங்கி ஊழியரும், தனியார் நிறுவன ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பும் வகையில் டிராபிக் ராமசாமி மற்றும் அவரது உதவியாளர் பாத்திமா ஆகியோர் சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கிஷோர் கே.சுவாமி என்பவர் புகார் அளித்துள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close