Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்துல் கலாம் நினைவிடத்தில் சர்வே பணிகள்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு மண்டபம் அமைக்க 15-ம் தேதி அடிக்கல் நாட்டப்படவுள்ள நிலையில், அவரது நினைவிடத்தில் அதற்கான சர்வே பணிகள் தொடங்கியுள்ளன.

ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் அமைந்துள்ள கலாம் நினைவிடத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பில் நினைவு மண்டபம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்பட உள்ளது. அதன்படி, நினைவு மண்டபம் ரூ.15 கோடி மதிப்பிலும், அறிவுசார் மண்டபம் ரூ.35 கோடியிலும் அமைக்கப்பட உள்ளன.

அவரது பிறந்த நாளான அக்டோபர், 15-ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இதனையடுத்து இன்று அதற்கான சர்வே பணிகள் தொடங்கியுள்ளன.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ