Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓலா, ஊபர், உடூ... கால் டாக்ஸி பயணங்கள் எப்படி இருக்கின்றன? #RideExperience

காருக்கோ, ஆட்டோவுக்கோ போன் செய்து விட்டு, வருதானு....வழிமேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. மொபைல் புரட்சியில் போன் போட்டு பேரம் பேசிக் கொண்டிருக்கலாம் நேரம் இல்லை. மொபைலில் ஆப்பை டவுன்லோடு செய்து வைத்துக் கொண்டால் போதும். நினைத்த நேரம் காரை புக் செய்தால்,  அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கார் நம் முன்னே வந்து நிற்கிறது. கார் டிரைவரின் புகைப்படம், போன் நம்பர், கார் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது எவ்வளவு நேரத்தில் வரும் என்ற விபரம் முதற் கொண்டு ஆப்பிலேயே தெரிகிறது. நினைத்தால் கேன்சல் செய்து கொள்ளலாம். டிரைவர் பிஹேவியர் சரியில்லனா அதே ஆப்பிலேயே புகாரும் செய்து கொள்ளலாம். செல்போன் கையில் இருந்தாலும் போன் பேச வேண்டிய அவசியமே இல்லை.

ஒரு ஆப் உங்களுக்கு இத்தனை விஷயங்களையும் செய்து விடுகிறது. மனித வாழ்க்கையை டெக்னாலஜி சத்தமில்லாமல் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பதை அறிந்து வியக்காமல் இருக்க முடியவில்லை. சென்னையில் ஓலா, உபேர்,ஊடூ போன்ற கால் டாக் சிகள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளன. இந்த வாகனங்களில் செயல்பாடுகள் என்ன... புக் செய்தவுடன் எத்தனை நிமிடத்தில் வண்டி கிடைக்கிறது... டிரைவர்களின் செயல்பாடுகள் எப்படி... என்பதை அறிந்து கொள்ள களஆய்வு மேற்கொண்டோம்.

முதலில் மயிலாப்பூரில் இருந்து அம்பத்தூருக்கு ஓலாவை புக் செய்தோம். அடுத்த 5வது நிமிடத்தில் ஒரு ஃபோர்ட் ஃபிகோ வந்து எட்டிப் பார்த்தது. டிரைவரின் பெயர் பிரபு. பேசிக் கொண்டே பயணித்தோம். கொஞ்சமும் முகத்தைச் சுளிக்காமல் பேசினார். அதுக்குலாம் டிரெயினிங் கொடுத்துருக்காங்களாம் '' மெக்கானிக்கல் படிச்சுட்டு கார் ஓட்ட வந்துட்டேன். இந்த மாதிரி டாக் சிகள் வந்த பிறகுதான் என்னை மாதிரி கார் டிரைவருங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கோம். ஜாப் செக்கியூரிட்டி இருக்குது. செலவுலாம் போயி மாசத்துக்கு 40 ஆயிரம் வரை கையில நிக்குது. வண்டி லோனுக்கு ரூ. 13,500 கட்டனும். நிரந்தர வருமானம் கிடைக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்  '' என்கிறார் உற்சாகமாக.

ஒலாவை பொறுத்த வரை, டிரைவர்கள் சொந்த வண்டி வைத்திருக்க வேண்டும். மைக்ரோ, மினி, பிரைம், ஓலா ஷேர் என நான்கு வகைகளில் சேவை கிடைக்கிறது. மைக்ரோவில் இன்டிகா, ஃபோர்ட்ஃ பிகோ ரக கார்கள் இதில் முதல் 4 கி.மீட்டருக்கு ரூ.50 கட்டணம். அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 6 ரூபாய் இது தவிர ஒரு நிமிஷத்துக்கு ஒரு ரூபாய் என கி.மீக்கு மொத்தம் 7 ரூபாய். மினி ரகத்தில் இன்டிகோ, ஷிப்ட் டிசையர் ரக கார்கள் இருக்கின்றன. அடிப்படைக் கட்டணம் முதல் 4 கி.மீக்கு ரூ. 90 கூடுதலாக  9 பிளஸ் ஒரு ரூபாய் என மொத்தம் ரூ  10  வசூலிக்கப்படுகிறது. பிரைம் ரகத்தில் ஷைலோ மற்றும் இன்னோவா போன்ற பெரிய ரக கார்கள்.  ஓலா ஷேரில், ஒரே இடத்துக்கு 3 வரை பேர் சேர்ந்து பயணிக்கலாம். அல்லது ஒரு வாடிக்கையாளர் செல்லும் பாதையில் இன்னொருவரை இறக்கி விடலாம். இந்த சேவை வாடிக்கையாளர்களின் ஒப்புதலுடன் வழங்கப்படுகிறது. இதில் பாதிக் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. பீக் ஹவர்களில் ஓலாக் கார்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பது பரவலான குற்றச்சாட்டு. 

மயிலாப்பூரில் இருந்து அம்பத்தூர் எஸ்டேட் வரைச் செல்ல ரூ. 251  ஆகியிருந்தது. பணத்தை செட்டில் செய்து விட்டு ஓலாவை விட்டு இறங்கினோம். அடுத்து உபேர்  மற்றும் ஊடூ இரண்டுக்குமே புக் செய்து. எந்த கார் முதலில் வருகிறது என்று பார்த்தோம். உபேர் நம்மை வெகு வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனடியாக யூடூவை கேன்சல் செய்து விட்டு உபேரில் கிண்டிக்கு பிக்அப் ஆனோம்.

உபேரும் நான்கு வகைச் சேவை வழங்குகிறது. 'உபேர் கோ' ரகத்தில் இன்டிகா போன்ற குட்டி கார்கள் இடம் பெறுகின்றன. முதல் நான்கு கிலோ மீட்டருக்கு 40 ரூபாய். கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 6 ரூபாய். அடுத்து உபேர் எக்ஸ் வகையில் ஸிஃப்ட் டிசையர், டொயாட்டோ இடியோஸ் ரக கார்கள் வருகின்றன. அடிப்படை விலை ரூ.40 மற்றும் கிலோ மீட்டருக்கு ரூ. 7 கட்டணம். உபேர் எக்ஸ் எல் ரகத்தில் எஸ்.யூ.வி போன்ற பெரிய ரகக கார்கள் இடம் பெறுகின்றன. அடிப்படைக்கட்டணம் 150 ரூபாய் மற்றும் கிலோ மீட்டருக்கு 18 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நான்காவதாக உபேர் பூல். இதில் ஒரே இடத்துக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் கூட்டாகச் சேர்ந்த பயணிக்கலாம். சில சமயங்களில் சைதாப் பேட்டை போன்ற இடங்களில் 5 வண்டிதான் இருக்கிறது என்றால், 10 வாடிக்கையாளர்கள் தனித் தனியாக கார் கேட்கும் பட்சத்தில் கூடுதலாக எந்த வாடிக்கையாளர் அதிக கட்டணம் செலுத்த முன் வரும் அந்த ஐந்து பேரை உபேர் வண்டிகள் பிக்அப் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதற்கு 'சார்ஜிங் ' என்று பெயராம்.

எது எப்படி போனாலும் இந்த கால் டாக் ஷிகளின் வருகை டிரைவர்களின் நடத்தைகளில் பெரிய மாற்றத்தை விதைத்திருக்கின்றன. உபேர் கார் டிரைவரின் பெயர் ஷ்யாம்.  மாதவருவாயாக செலவுகள் போய் 35 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறதாம். ஸிஃப்ட்  வண்டி லோனுக்காக மாசம் 16 ஆயிரம் கட்டுகிறார். உபேர் டிரைவர்கள் மீது வரும் குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் பேசினோம். '' ''ஆயிரக்கணக்கான டிரைவர்கள் இருக்குறாங்க. ஒரு சிலரின் நடத்தைக்காக எல்லோரையும் அதேக் கண்ணோட்டத்தில்  பார்ப்பது தவறு. கார் எங்களோடது. கம்பெனி ஆப் பண்ணி தந்துருக்குது அவ்ளோதான். எங்களுக்கு கிடைக்குற ஆர்டர்ல இருந்து 20 சதவீதம் கம்பெனி எடுத்துக்கிடும். நாங்களும் அவங்ககிட்ட கை ஏந்தல. அவஙகளும் எங்ககிட்ட கையேந்தல. டிவைஸ் ஆன் பண்ணி வச்சா ஆர்டர் தருவாங்க. ஆப் பண்ணிட்டாலும் தேட மாட்டாங்க. பீக் ஹவர்ஸல எங்க அதிக ஆஃபர் கிடைக்கும்னு பார்த்து கூட சிலர் கார் ஓட்டுவாங்க. அப்போ உபேர் டிவைசை ஆப் பண்ணிட்டு ஓலாவுக்காக  ஓட்டுறவங்களும் இருக்காங்க. ஆனா, அப்படி ஓட்டுனா டார்கெட் கிடைக்காது . எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்மை வேணும்''... ஷ்யாம் கூறிக் கொண்டிருக்கும் போது கிண்டி தொழிற்பேட்டை நம் கண்ணுக்குத் தெரிந்தது.

ஒலிம்பியா அருகே இறங்கிக் கொண்டோம். கடைசியாக கடைக்குட்டியாக இறங்கி கலக்கிக் கொண்டிருக்கும் ஊடூ ஆப்புக்குள் மீண்டும் புகுந்தோம்.  (ஏர்செல் அதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமானது. ஓலாவையும் உபேரையும் ஓரம் கட்டும் வகையில் தொடங்கப்பட்டது) ஷெடான்  ஒரு நிமிஷத்துல கிடைக்கும் என்றது. புக் செய்து விட்டு காத்திருந்தோம. திரும்பி பார்த்தா...  அழகான  சன்னி வந்து நின்றது. ஆச்சரியமாகிப் போனது நமக்கு. ராயப்பேட்டை போகனும்னு சொல்லிட்டு சட்டென்று சன்னிக்குள் அடைக்கலமானோம். ஊடூ டிரைவர் சற்று வித்தியாசமாக தெரிந்தார்.

சட்டைக்கு பின்புறம் லோகோவுடன் கூடிய யூனிபார்ம் அணிந்திருந்தார். யூனிபார்ம் கட்டாயமாம். கால் டாக் ஷிகளில் ஊடூ வித்தியாசமானது. மற்ற நிறுவனங்கள் காருடன் உள்ள டிரைவர்களை வைத்து தொழில்புரிகின்றன. ஆனால்,  ஊடூவோ மிகச்சிறந்த டிரைவர்களை தேர்வு செய்து அவர்களிடம் காரை ஒப்படைக்கிறது. இன்னொரு விஷயம் என்னவென்றால், நிஷான் ரக கார்களை மட்டும்தான் ஊடூ  நிறுவனம் பயன்படுத்துகிறது.  அடிப்படைக் கட்டணம் 40 ரூபாய். கூடுதல் கிலோ மீட்டருக்கு 8 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இங்க எப்பவும் ஒரே ரேட்தான். பீக் ஹவர்சுக்குனுலாம் தனி ரேட் கிடையாது.

டிரைவர் செந்திலிடம் பேசினோம். ரொம்ப பவ்யமானவராகவேத் தெரிந்தார். '' சார் எங்களுக்கு மாசச்சம்பளம்தான். பிடித்தம் போக 15 ஆயிரம் கைக்கு வரும். 5 ஆயிரம் பிக்அப் ஓட்டுனா அந்த கார ஓட்டுபவருக்கே சொந்தம்னு கம்பெனி சொல்லிருக்குது. அதனால சொந்தக் காரை ஓட்டுறோம்ங்கற ஃபீலிங் இருக்குது. ஒரு நாளைக்கு 4,5 பிக்கஅப் கிடைக்கும். குடி, பாக்கு சிகரெட்லாம் இல்லாம இருந்தா டிரைவருங்களோட அடையாளத்தையே இந்தத் தொழில் மாத்திக் காட்டிடும். எங்க கம்பெனில என்னை ராஜா சார்...னுதான்  கூப்பிடுவாங்க. அப்படிதான் எங்கள எங்க கம்பெனி நடத்துது. வேலைக்கு சேர்ந்த அன்னைக்கே 10 லட்ச ரூபா காரத் தூக்கி கொடுத்தாங்க. அந்த நம்பிக்கையை மட்டும் காப்பாத்துனா போதும்'' என்பவர் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம படர்ந்திருந்தது.

-எம். குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ