Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த புகாரின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கின்றனர். அரசு சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தமிழக அரசின் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், புகார்கள் பதிவு செய்யப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close