Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காமாட்சியம்மனுக்கு மாங்கல்ய பூஜை... விஷாலின் வழிபாடுக்கு இதுதான் காரணமா?

காஞ்சிபுரம் : இன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு தனது பெற்றோருடன் வந்த நடிகர் விஷால், மாங்கல்ய பூஜை நடத்தி வழிபாடு செய்தார்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு இன்று காலை வருகிறார் என்ற தகவல் அறிந்த உடனே ஜெயலலிதா உடல்நலம் பெற வழிபாடு நடத்த உள்ளார் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் பெற்றோருடன் வந்த நடிகர் விஷால், காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, மாங்கல்ய பூஜை நடத்தி வழிபட்டார்.
காலை 9.30 மணிக்கு கோயிலுக்கு வந்தவர், 12 மணிக்கு பின்னரே கோயிலில் இருந்து வெளியே வந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "காமாட்சி அம்மனை தரிசிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்தது. அது இன்று நிறைவேறிவிட்டது. அம்மனுக்கு முன்பே அமர்ந்து அபிஷேகத்தை பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. மருத்துவமனையில் உள்ள முதல்வர் விரைவில் குணமடைந்து பணிகளை தொடர வேண்டும். நடிகர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வேலைகளை செய்து கொண்டிருக்கிறோம். சிவகார்த்திகேயனுக்கு உள்ள பிரச்னைகளை கேள்விப்பட்டேன். அவரை நேரில் சந்தக்கவில்லை. சினிமா துறையை பொறுத்தவரை கட்டப்பஞ்சாயத்து என்பது இருக்கிறது. நானும் இதை அனுபவித்து இருக்கிறேன். உறுதியாக எல்லோருக்கும் நல்லமுடிவு கிடைக்கும்,” என்றார்.

விஷால் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியதற்கான காரணம் தெரியப்படுத்தப்படவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் காமாட்சி அம்மன் கோயிலில் நடிகர் விவேக், முதல்வர் ஜெயலலிதாவுக்காக வழிபாடு நடத்தியிருந்த நிலையில், அதே கோரிக்கைக்காக நடிகர் விஷாலும் வழிபாடு நடத்துவதாக முதலில் சொல்லப்பட்டது.

அதேபோல் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற உடன் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதாக விஷால் வேண்டிக் கொண்டிருந்தார். அந்த வேண்டுதலை நிறைவேற்றத்தான் இன்று வந்திருந்தார் எனவும் சொல்லப்பட்டது.
ஆனால் இந்த வழிபாடு குறித்து விஷால் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதுதொடர்பாக கோயில் வட்டாரத்தில் விசாரித்தோம். "விஷால் தங்கைக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. திருமணம் சிறப்பாக நடைபெறவேண்டும் என மாங்கல்ய பூஜை செய்து காமாட்சி அம்மனை வழிபட்டார். அதனால்தான் குடும்பத்துடன் வந்திருந்தார்," என்றனர்.

- பா.ஜெயவேல்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ