Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின் உற்பத்தி தொடக்கம்

கூடங்குளம் 2-வது அணுஉலையில் இன்றிரவு அல்லது நாளை காலை மீண்டும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள 2-வது அணுஉலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதனிடையே திடீரென்று செப்டம்பர் 6-ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், 2-வது அணுஉலையில் இன்றிரவு அல்லது நாளை காலை மீண்டும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கிறது. மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் கடந்த ஒருவாரமாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கூடங்குளத்தில் 3, 4-வது அணுஉலைகளுக்கான கட்டுமானப்பணி நாளை தொடங்குகிறது. கானொலிக்காட்சி மூலம் மோடி- புதின் கூட்டாக கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்கின்றனர்.

.............

எடிட்டர் சாய்ஸ்

MUST READ