Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் குணமடைய அலகு குத்தி அதிமுகவினர் நேர்த்திக்கடன் 

முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி தேனி மாவட்டத்தில் அதிமுகவினர் பால்குடம், தீச்சட்டி, அலகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 23 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் குணமடைய வேண்டி அமைச்சர்கள், எம்எல்ஏகள் பல்வேறு கோயில்களில் யாகம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இன்று பால்குடம், தீச்சட்டி, அலகுகுத்தி ஜெயலலிதா குணமடைய நேர்த்திக்கடன் செலுத்தினர்.

படம்: சரவணகுமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ