Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிமுக ஆண்டு விழா அக்.17-ல் கொண்டாட்டம்

அதிமுகவின் 45-ம் ஆண்டு தொடக்க நாள் விழா வரும் 17-ம் தேதி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்படுகிறது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் அதிமுக தொடங்கப்பட்டது. இந்த கட்சி தொடங்கப்பட்டு 45-ம் ஆண்டு வரும் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், கட்சியின் ஆண்டு விழா வரும் 17-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்படுகிறது. கட்சி வளாகத்தி்ல் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அவைத் தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்து கொடியேற்றி வைக்கிறார்.

மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதிமுகவின் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ