Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓ.பி.எஸ்.சை சந்தித்தது ஏன்? ஸ்டாலின் விளக்கம்

 

சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்துக்கு இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், எம்எல்ஏக்கள் பொன்முடி, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் வந்தனர். அவர்கள், நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை ஒரே அறையில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சில நிமிடங்களே நீடித்தது.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பாக விவசாயிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தின் அறிக்கையை அமைச்சர்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்தோம். இருவரையும் ஒரே அறையில்தான் சந்தித்து பேசினோம். தலைமைச் செயலாளரை சந்திக்கவில்லை. அதனுடைய நகலை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளோம். நீதிமன்றம் என்பது வேறு, அது சட்டரீதியாக செல்ல வேண்டியது. எப்படி கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்களோ அந்த உணர்வை தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்களும் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 

 

தமிழக அரசின் நிர்வாகம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. நேற்று நாங்கள் விவசாயிகள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் நகலை நிதியமைச்சரிடம் கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்துள்ளனர். காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சியினரும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று நாங்கள் கூறியிருக்கிறோம். பரிசீலிக்கிறோம் என்று அமைச்சர்கள் உறுதிமொழி தந்திருக்கிறார்கள்" என்றார்.

படம்: ஆ.முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்