Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் உடல்நிலை பற்றி வதந்தி: கோவையில் வங்கி ஊழியர்கள் 2 பேர் சிக்கினர்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக கோவையில் வங்கி ஊழியர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா 23 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்தார். இந்த எச்சரிக்கையும் மீறி முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்பட்டு வருகி்ன்றன.

இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய சென்னை பம்மலை சேர்ந்தவர் பாலசுந்தரம், ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த திருமணி ஆகியோரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இதில் திருமணி தனியார் வங்கி ஊழியர் ஆவார். பாலசுந்தரம், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கோவையை சேர்ந்த வங்கி ஊழியர்கள் ரமேஷ், சுரேஷ் ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் வடவள்ளி மற்றும் சாய்பாபா காலனி பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ