Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அணுஉலைக்கு எதிராக கருப்புக்கொடி ஏற்றுங்கள்: சுப.உதயகுமாரன் வேண்டுகோள்

கூடங்குளம் 3, 4-வது அணு உலைகளுக்கு அஸ்திவாரம் போடும் வேலையை எதிர்த்து தமிழர்கள் அனைவரும் உங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றுங்கள் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத் தலைவரும், பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவருமான சுப. உதயகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூலில், கூடங்குளம் 3, 4-வது அணு உலைகளுக்கு அஸ்திவாரம் காங்க்ரீட் போடும் வேலையை (Base Concreting Work) பிரதமர் மோடியும், ரஷ்யாவின் விளாடிமிர் புடினும் நாளை 1:05 மணிக்கு கோவாவிலிருந்து காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்களாம். கோவா  சோதிடர் குறித்துக் கொடுத்த நேரமாக இருக்கலாம். முதலிரண்டு உலைகளும் முடங்கிக் கிடக்கும்போது, முனகிக்கொண்டிருக்கும்போது ஏன் கூடுதலாகக் கட்டுகிறீர்கள் என்று கேட்பதற்கோ, மின்மிகை மாநிலம் ஆகிவிட்ட பிறகு கூடுதல் உலைகள் இங்கேத் தேவையில்லை என்று சொல்வதற்கோ நமக்கு முதல்வரும் கிடையாது, எதிர்க்கட்சித் தலைவரும் கிடையாது. என்ன செய்யப் போகிறோம் நாம்?

இந்த காணொளி காங்கிரீட் சடங்கு நடக்கும் நேரம் நானும் சில தோழர்களும் பயணத்தில் இருப்போம். தமிழர்கள் அனைவரும் தயவு செய்து உங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றுங்கள். நெஞ்சில் கறுப்புக்கொடி ஏந்துங்கள். இனி என்ன செய்வது என்பது பற்றி அனைவருமாக விரைவில் கூடிப் பேசுவோம், திட்டமிடுவோம், களமாடுவோம். உங்கள் எண்ணங்கள், கருத்துகள், பரிந்துரைகளை எழுதுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

- ஆண்டனிராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ