Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விரைவில் தமிழகத்துக்கு புதிய ஆளுநர்...?

த்தியில் 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சி அமைந்ததும், முதல் வேலையாக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமான ஆளுநர்களை அரசு மாற்றியது. பதவி விலக மறுத்த சில ஆளுநர்களை பதவியை விட்டு நீக்கவும் மத்திய அரசு தயங்கவில்லை. ஏறக்குறைய இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தற்போது பதவியில் இல்லை எனலாம்.

இதில் விதிவிலக்காக, தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்தவர் தமிழக ஆளுநராக இருந்த, முன்னாள் ஆந்திரப் பிரதேச முதலமைச்சசர் கே. ரோசையா மட்டுமே.  அதற்குக் காரணம், முதலமைச்சர் ஜெயலலிதா தான். 2014-ம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி  வெற்றி பெற்று, பிரதமராகப் பொறுப்பேற்றதும்,  முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லி சென்று அவரைச் சந்தித்தார். பிரதமருடனான முதல் சந்திப்பின்போதே, "தமிழக ஆளுநர் பதவியில் இருந்து ரோசையாவை மாற்றிவிட வேண்டாம். அவருக்கான கௌரவத்துடன் முழு பதவிக்காலத்தையும் அவர் நிறைவு செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையிலேயே ரோசையாவுக்கு மத்திய அரசு எவ்வித இடையூறும் அளிக்காமல் தமிழக ஆளுநர் பதவியில் நீடிக்க அனுமதித்தது. 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட ரோசையாவின் பதவிக் காலம், கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

 ரோசையாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என அறிவிப்பு வெளியானது. தமிழகத்துக்குப் புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை கூடுதலாக வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

ரோசையாவுக்கு தமிழக ஆளுநராக பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் வேண்டுகோளை மத்திய அரசு ஏற்கவில்லை. ரோசையாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்காதது குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அரசின் மீது சற்றே வருத்தம் தான். தமிழக பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ்   செப்டம்பர் 2-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற ஜெயலலிதா,  ரோசையா மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

மகாராஷ்டிர மாநிலத்தைப் பொறுத்தவரை, நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை உள்ளடக்கியுள்ள மிகமுக்கியமான மாநிலம். மேலும் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். எனவே, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்துக்கு நீண்டகாலம் ஒரே ஆளுநர் பதவியில் இருப்பது சரியானதாக இருக்காது என்று மத்திய அரசு கருதுகிறது. விரைவில் ஏதாவது ஒரு மாநிலத்துக்கு ஆளுநரை நியமித்தாக வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ம் தேதி, உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல்நிலை குறித்து, மருத்துவமனைக்கு ஆளுநர் வித்யாசாகர் நேரில் வந்து, கேட்டறிந்தார். 

தொடர்ந்து முதல்வர்  ஜெயலலிதா சிகிச்சையில் இருப்பதால் தமிழக அரசு நிர்வாகத்தில் சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கேற்ப நிர்வாக ரீதியாக முடிவு எடுக்க வேண்டும் என்று வித்யாசாகர் ராவ் தீவிரமாக இருந்தார். இதனால்தான் முதல்வர் ஜெயலலிதா வசம் இருந்த அனைத்து துறைகளையும் நிதியமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் கவனிப்பார் என கடந்த 11-ம் தேதி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்தார். முதல்வர் பதவியில் ஜெயலலிதா தொடர்வார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில், தமிழகத்துக்கு புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வித்யாசாகர் ராவ்  மகாராஷ்டிர மாநில ஆளுநராக மட்டும் நீடிப்பார் என்றும், தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என்றும் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. புதிய ஆளுநர் யார் என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- சி. வெங்கட சேது

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ