Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்துல் கலாம் நினைவு மண்டபம் கட்டும் பணிகள் தொடங்கின

முன்னாள் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 85-வது பிறந்தநாளான இன்று, அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமேஸ்வரம் பேக்கரும்பில், நினைவு மண்டபம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், கலாமின் சகோதரர், முகமது முத்துமீரான் மரைக்காயர், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன கூடுதல் இயக்குநர் வி.கே.சிங், கட்டுமான பொறியாளர் சீனிவாசலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இங்கு 5 ஏக்கர் பரப்பளவில், 50 கோடி செலவில் அமைய உள்ள இந்த நினைவகத்தில், அறிவுசார் மையம், நூலகம், பிரார்த்தனை மண்டபம் ஆகியவை அமைக்கப்பட இருக்கிறன. கலாமின் நினைவிடத்துக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பிரமுகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியர்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களையும் கவர்ந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்" என்று டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ