Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவுக்கு ஸ்விட்சர்லாந்திலிருந்து உணவுப் பொருள் தருவிக்கப்படுகிறதா? 

முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் (பொறுப்பு), மத்திய அமைச்சர்கள், தேசியத் தலைவர்கள், தமிழக எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அகில இந்திய பிரபலங்கள் தொடர்ந்து அப்போலோ மருத்துவனைக்கு வருகை புரிந்து மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்துச் செல்கின்றனர். அப்போலோ அறிக்கை மட்டுமே முதல்வரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல் சொல்கிறது. மருத்துவர்களோ, கட்சித் தரப்பினரோ, மருத்துவமனைக்கு வந்து செல்லும் பிரமுகர்களோ ஜெயலலிதா உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளிப்படையாகச் சொல்வதில்லை.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு கொடுப்பதற்காக ஊட்டச்சத்து உணவுப் பொருள் ஸ்விட்சர்லாந்திருந்து தருவிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் சில ஊழியர்கள். முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வரும் மருத்துவர், கடந்த 7-ம் தேதி ஸ்விட்சர்லாந்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவுக்காக ஸ்பெஷலாக 'திரவ உணவுப் பொருட்களை' வரவழைத்தாராம். கடந்த 4-ம் தேதி ஸ்விட்சர்லாந்து நெஸ்டெக் (Nestec) நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட திரவ உணவுப் பொருட்கள் 7-ம் தேதி அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

சுமார் 18 கிலோ எடை கொண்ட அந்த பெட்டியில் Peptamen Smartflex என்கிற உணவுப் பொருள் சுமார் 36 டின் பாட்டில்களில் வந்துள்ளது. அந்த டின் பாட்டில்கள் ஒவ்வொன்றும் 500 மி.லி அளவு கொண்டவை.  அதனைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி காலை 7.30 மணிக்கு தனிப்பட்ட முறையில் சென்னை அப்போலோ மருத்துவனைக்கு அந்தப் பெட்டி டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

’இந்த வகை திரவ உணவு பொருட்கள், செயற்கை சுவாசம் மேற்கொள்ளும், ஒருவருக்கு டியூப் மூலம் நேரடியாக உணவு குழாய்க்கே செலுத்தக்கூடிய உணவு' என்கிறார்கள் மருத்துவர்கள். Peptamen Smartflex திரவ உணவு எதற்காக, யாருக்கு கொடுக்கப்படக்கூடியது என்று  சில டாக்டர்களிடம் விசாரித்தோம். "இந்த திரவ உணவு, ஹெல்த் மற்றும் எனர்ஜி டிரிங் வகையை சார்ந்தது. இது, உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வழக்கப்படக்கூடியது. முக்கியமாக அன்றாட உணவுகளை உட்கொள்ள முடியாமல், ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கோ அல்லது செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட ஒருவருக்கோ குழாய் வழியாக வழங்கப்படக்கூடிய ஹெல்த் மற்றும் எனர்ஜி டிரிங். மிக விரைவில் செரிமானமாகும் தன்மை கொண்ட உணவுப் பொருள் இது!’ என்றார்கள்.

நெஸ்ட்லே (Nestle) தயாரிப்பான இந்த உணவு பொருட்கள் இந்தியாவிலேயே கிடைக்கும். அதே நேரத்தில் வெளிநாட்டிலிருந்து இதை வரவழைத்திருக்கிறார்கள். மேம்பட்ட தரத்துடன் இருக்க வேண்டும் என்பது நோக்கமாக இருக்கலாம்.
முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெறட்டும்!

- ரா.வளன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ