Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தரை தளத்தில் ஜெயலலிதாவுக்கு ஸ்கேன்! அப்போலோ அப்டேட்

அப்போலோ ஆஸ்பத்திரியின் இரண்டாவது மாடியில் அட்மிட் ஆகியிருக்கும் ஜெயலலிதா நேற்று மாலை மூன்றாவது முறையாக தரை தளத்துக்கு அழைத்துவரப்பட்டார். உடலின் முக்கிய உள்பாகங்களை துள்ளியமாக படமெடுத்துக்காட்டும் சி.டி. ஸ்கேன் மிஷின் உள்ள ரேடியாலாஜி அறையானது தரைத்தள லிஃப்ட்டுக்கு அருகில் உள்ளது. இந்த ஸ்கேன் மிஷினை வேறு எங்கும் கொண்டுபோகமுடியாது. நோயாளியை அந்த அறைக்கு அழைத்து வந்துதான் ஆகவேண்டும். அந்தவகையில், நேற்று எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஜெயலலிதாவின் படுத்திருக்கும் பெட்டுடன் அப்படியே தரைத்தளத்துக்கு அழைத்துவந்தார்கள். அந்த நேரத்தில், ஆஸ்பத்திரி லிஃப்ட் மற்றும் தரைத்தளம்...ஆகியவை போலீஸின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. வெளியாட்கள் யாரையும் அந்த வளாகம் பக்கமே அனுமதிக்கவில்லை. ஸ்கேன் எடுத்து முடித்தும், அதன் விவரங்களை டாக்டர்கள் பார்த்தனர். திருப்திகரமாக இருக்கிறது என்று கருத்துச் சொன்னார்களாம்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close