Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுகாதாரச் சீர்கேடுகளைத் தடுக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 

சென்னை மாநகரத்தில் சுகாதாரச் சீர்கேடுகளைக் களைந்து காய்ச்சல்கள் வராமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.  மேலும், சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கினால் கொடிய காய்ச்சல்களின் கொடுமைக்கு பொதுமக்கள் ஆளாகி, இன்றைய சூழ்நிலையில் ஒரே நாளில் நான்கு குழந்தைகள் இறந்து போகும் அவல நிலை உருவாகி உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். அத்துடன் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய தரமான சிகிச்சை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
 

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ