Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சதுரகிரி மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது!

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. கனமழை பெய்துவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பவுர்ணமி என்பதால் மலைக்கோயிலுக்கு செல்ல சதுரகிரி மலை அடிவாரத்தில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

சதுரகிரி மலையில் மழைக்காலத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். சென்ற வருடம் ஏற்பட்ட வெள்ளத்தில் சாமி தரிசனம் செய்ய மலையேறிய பக்தர்கள் பலர் கடும் இன்னலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. அவர்களை மீட்புப்படையினர் சிரமப்பட்டு மீட்டு வந்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ