Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதற்காகத்தான் வந்தாரா நீதா அம்பானி...!

யார் வந்தும் இவ்வளவு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தவில்லை. இவரின் வருகையில் கூறப்படும் அத்தனை காரணங்களையும் புறம்தள்ளி கேள்விக்கணைகள் தொங்கிநிற்கின்றன. எதற்காக ஜெயலலிதாவைப் பார்க்க வந்தார் நீதா அம்பானி?

ரிலையன்ஸ் அதானி!

தமிழகத்தில் தொழில் முதலீட்டில் தற்போது ரிலையன்ஸைவிட அதானிக் குழுமம் முன்னிலையில் உள்ளது. முன்பு, ரிலையன்ஸ் சூப்பர் மார்கெட்களை நிறுவ தமிழகத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரிய தொழில் முதலீடுகள் எதையும் தமிழகத்தில் செய்யவில்லை.

அதானிக் குழுமமோ ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், ரூ.4,536 கோடி மதிப்பில் ஐந்து சூரிய மின் உற்பத்தி நிறுவனங்களை நிறுவ உள்ளது. இது, அந்த நிறுவனத்தின் முதலீட்டில் பெரிய திட்டம் என்று கூறலாம். இந்திய வர்த்தகச் சந்தையில் வேறு தொழில்களைச் செய்தாலும் ரிலையன்ஸ் - அதானி நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.

தமிழகம்!

பெட்ரோலியத் துறையில் முன்னிலையில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் தமிழகத்தில் கால்பாதிக்க மீத்தேன் திட்டத்தில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு மீத்தேன் ஒப்பந்தம் வழக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் போராட்டம் நடத்தின. இதனை அடுத்து இந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். ஆனால், மீத்தேன் திட்டத்தை பி.ஜே.பி அரசு முழுவதுமாக ரத்து செய்யவில்லை. கான்ட்ராக்ட் மட்டும்தான் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அதாவது, அனுமதி அளிக்கப்பட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டிய பணிகளை GEECL நிறுவனம் முடிக்காததால், இந்த கான்ட்ராக்ட் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும், இது தற்காலிகம் ஆனதுதான். நிரந்தரம் இல்லை என்றும் கூறபடுகிறது. இதை முழு வேகத்தில் செயல்படுத்தும் நிறுவனத்தை அரசு எதிர்பார்த்தது அல்லது அரசை எதிர்பார்க்கவைத்தது ரிலையன்ஸ் குழுமம். இதையடுத்து, தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைக் கைப்பற்ற ரிலையன்ஸ் குழுமம் முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

நீதாவும்... ஜெயாவும்!

மீத்தேன் திட்டம் தற்போது ரத்து செய்ததுபோல் இருந்தாலும் இந்தத் திட்டத்தைத் தொடர ரிலையன்ஸ் நிறுவனம் மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் அந்த அனுமதியைப் பெற்றால் அதற்கு தமிழக அரசு ஒத்துழைப்புத் தேவை.

இதற்கான பேச்சுவார்த்தைகளைத் தமிழக அதிகாரிகள் மட்டத்தில் அந்த நிறுவனம் நடத்தியதாகத் தமிழக அரசின் ஒத்துழைப்புக் குறித்த கருத்தைச் சொல்வதற்கு முன்பு, முதல்வர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்தே நீதா அம்பானி, தமிழகம் வந்ததாகவும் கூறப்படுகிறது. 12-ம் தேதி அப்போலோ வந்தவரை தமிழக அதிகாரிகள் வரவேற்று மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றனர். முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்த நீதா, அப்போலோ நிறுவனர் பிரதாப் ரெட்டியிடம் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார். மீத்தேன் குறித்த விஷயங்களை ‘ஃபாலோ’ செய்துகொள்ளுமாறு ரிலையன்ஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

- பிரம்மா

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ