Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தடகள விராங்கனை சாந்திக்கு நிரந்தர அரசு வேலை

தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக அரசு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக அரசுப் பணி வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 


புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியைச் சேர்ந்தவர் சாந்தி. கடந்த 2006-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஆனால், அவரது பாலினம் குறித்து சர்ச்சை எழுந்ததால் பதக்கம் பறிக்கப்பட்டது. அவர் தடகளப் போட்டிகளில் பங்கேற்கவும் தடைவிதிக்கப்பட்டது. இதனால் வறுமையில் வாடிய சாந்தி செங்கல் சூளையில் வேலைபார்த்தார். தற்போது தேசிய விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்தப் பணியாளராக சாந்தி பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், பயிற்சியாளராக நிரந்தர அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் இந்த பணிக்கான அரசாணை சாந்தியிடம் வழங்கப்பட்டுள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ