Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'டார்கெட் ஒலிம்பிக்!' கிக் பாக்ஸிங் சாம்பியன் பாத்திமா ரதீகா


ராமநாதபுரம் மாவட்டத்தில் ராஜா உசேன் என்பவருக்கு மகளாகப் பிறந்தவள் தான் பாத்திமா ரதீகா. தற்போது தேசிய அளவில் புதுச்சேரியில் நடைபெற்ற குத்துச் சண்டை (Kick Boxing)  போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இது பற்றி பாத்திமாவிடம் கேட்ட பொழுது,

நான்  எனது சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீது கொண்ட ஆர்வம் தான் எனது வெற்றிக்கு காரணம்.நான்  3ம் வகுப்பு படிக்கும் போது  படிப்பதற்காக ஒதுக்கப்படிருக்கும் நேரத்தில் நான் மட்டும் வகுப்பிற்குச் செல்லாமல் கராத்தே வகுப்புகள் நடக்கும் இடத்திற்குச் சென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன்.இதைத் தொடர்ந்து பார்த்து வந்த பயிற்சியாளர் குகன் என்னை அழைத்து எனக்கும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.ஆரம்பத்திலேயே நான் சிறப்பாகவும் வேகமாகவும்  இருந்ததால் எனக்கு குத்துச்சண்டை பயிற்சியளிக்கத் தொடங்கினார்.சிறு வயதில் என் விளையாட்டை ரசித்த எனது பெற்றோர்கள் நான் வளர்ந்த பிறகு எனக்கு ஆதரவாக இல்லை.பெண் பிள்ளை தானே இதுவே போதும் என்று தான் என்னை எல்லோரும் சொன்னார்கள்,காரணம் என்னுடைய மதம்.இஸ்லாமிய பெண் என்றால் வெளியே செல்லக் கூடாதா என்று அனைவரையும் எதிர்த்து தான் என்னுடைய வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினேன்.எனக்கு சிறு வயதிலிருந்த்து நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் இருந்தன,அனைத்தையும் உடைத்தெறிந்து விளையாட்டில் சாதிக்க துடித்தேன்.

 

2005 ம் ஆண்டு முதல் முறையாக நாகர்கோவிலில் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றேன். இதற்குப் பின் எனக்கு சிறந்த விளையாட்டு வீரர் என்று குத்துச்சண்டைப் பிரிவில் "யுவகலா பாரதி" என்னும் விருது எனக்கு வழங்கப்பட்டது.குண்டு எறிதல்,வட்டு எறிதல் என பல்வேறு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களும் பாராட்டுகளும் பெற்றுள்ளேன்.

2007ம் அண்டு கல்கத்தாவில் சர்வதேச அளவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தேன். 2014ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்தேன். இதன் மூலம் எனக்கு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் கிடைத்தன.இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட 8  நபர்களில் நான் மட்டும் பெண்ணாக இருந்ததுதான் நான் செய்த தவறோ என்ன தெரியவில்லை,எனது வீட்டில் எனக்கு ஆதரவாக பேச யாரும் இல்லை. ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் சிறப்பு முகாம் தாய்லாந்து நாட்டில்  நடைபெற்றது.எனது பொருளாதார சூழ்நிலையும் என்னை பயிற்சிக்கு செல்ல முடியாத நிலைக்குத் தள்ளியது.2016ம் ஆண்டு ஜனவரி மாதம் புதுவை மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தேன்.பிப்ரவரி மாதம் தமிழன் தொலைக்காட்சி சார்பில் தமிழக அளவில் "சிறந்த விளையாட்டு வீரர்"என்ற விருது வழங்கினார்கள்.அக்டோபர் மாதம் புதுவையில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் முதலிடத்தை பிடித்தது மட்டுமில்லாமல் குத்துச் சண்டை வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் தகுதியும் பெற்றுள்ளேன். இதுவரையில் 28 தங்கப்பதக்கங்களும்,2 சில்வர் பதக்கமும், நூற்றுக்கும் மேலாக சான்றிதழ்களும் பெற்றுள்ளேன்.எனக்கு முன்மாதிரியாக நான் யாரையும்  நினைக்கவில்லை என்னை யாரவது முன்மாதிரியாக நினைக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.என்னைப் போன்று சாதிக்க துடிக்கும் பல பெண்களுக்கு,வீரர்களுக்கு பயிற்சியளித்து அவர்களையும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் எனது லட்சியம் என்கிறார்,பாத்திமா ரதீகா.


- ச.புகழேந்தி
(மாணவ பத்திரிகையாளர்)
படங்கள்:
குரூஸ் தனம்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ