Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் ரயில் மறியல் போராட்டம்: ஸ்டாலின் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சென்னையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் பெரம்பூரில் பேரணியும் நடைபெற்றது. இதில், தற்போது ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் பூங்கோதை உட்பட்டோரும் கைதாகியுள்ளனர். கடும் பரபரப்பு அங்கு நிலவி வருகிறது. மேலும், திருவண்ணாமலையில் எ.வ.வேலு, தாம்பரத்தில் டி.ஆர்.பாலு ஆகியோரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேசின் பிரிட்ஜில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ